TamilSaaga

“சிங்கப்பூரின் மார்சிலிங் லேன்” : வீட்டு வாசலில் கிடந்த புழுக்கள் – வீட்டிற்குள் சென்ற போலீஸ் அதிர்ச்சி

சிங்கப்பூரில் 18 மார்சிலிங் லேனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ஆணின் அழுகிய உடல் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த அக்டோபர் 29ம் தேதி காலை, சம்பந்தப்பட்ட அந்த வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு ஆண் அந்த பக்கத்துக்கு வீட்டில் இருந்து பல புழுக்கள் வெளிப்படுவதைக் கண்டு உடனடியாக காவல்துறைக்கு அழைப்பு விடுத்துள்ளார். லியான்ஹே வான்பாவோவின் கூற்றுப்படி, பிளாக் 18 மார்சிலிங் லேனில் வசிப்பவர்கள் சடலம் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே துர்நாற்றம் வீசுவதைக் உணர்ந்துள்ளனர்.

ஆனால் அவர்கள் அதை குப்பையில் இருந்தோ அல்லது இறந்த எலியில் இருந்தோ அந்த துர்நாற்றம் வருவதாக கருதியுள்ளனர், இந்நிலையில் அக்டோபர் 29ம் தேதி காலை 7 மணியளவில் வீடுகளை விட்டு வெளியேறிய இரண்டு குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டு வாசலுக்கு முன்னால் உள்ள நடைபாதையில் புழுக்கள் ஊர்ந்து செல்வதைக் கண்டு திடுக்கிட்டனர்.

பஸ் கேப்டனாக பணிபுரியும் ஒருவர், பக்கத்து யூனிட்டில் இருந்து புழுக்கள் வருவதைக் கண்டுபிடித்ததாகவும், ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்ததாகவும் கூறினார். அங்கு வந்த போலீசார் துர்நாற்றம் வீசும் அந்த வீட்டின் கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் பின்னர் போலீசார் பூட்டுகளை சரிபார்க்கும் தொழிலாளியின் உதவியுடன் கதவை திறந்தனர், கதவை திறந்தவுடன் துர்நாற்றம் அதிகமாக வீசியது என்று அவர்கள் கூறினார்.

இருவரின் கூற்றுப்படி, இறந்தவர் அந்த வீட்டின் ஒரு அறையில் தரையில் கிடைத்துள்ளார். அந்த வீட்டில் பிளாட்டில் புழுக்கள் ஊர்ந்து செல்வதையும் காண முடிந்தது. அக்கம்பக்கத்தினர் அந்த குடும்பத்துடன் அதிக அறிமுகமில்லாதவர்கள் என்பதால், தற்போது அந்த குடியிருப்பில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்று கூட யாருக்கும் தெரியவில்லை. அந்த ஆண் பிணத்தை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி தற்போது விசாரணை நடந்து வருகின்றது.

Related posts