சிங்கப்பூரில் தனது முன்னாள் முதலாளி தனக்கு 500 வெள்ளி சம்பளத்தில் பாக்கி கொடுக்க வேண்டும் என்று எண்ணிய ஒரு நபர், அந்த வேலையை விட்டு வந்த 20 ஆண்டுகள் கழித்து அதே முதலாளிக்கும் போன் செய்து மிரட்டல் விடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இன்று புதன்கிழமை (ஏப்ரல் 13) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட, சீட் என்ஜியன் எங் என்ற அந்த 62 வயது நபர். தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார், தற்போது அவருக்கு $2,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை பெற்ற அந்த நபர் 60 வயதான திரு. நியோ ஹாங் சை என்பவரிடம் பணிபுரிந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் நீதிமன்ற ஆவணங்கள் அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கே வேலை செய்தார் என்பது பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.
கடந்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி இரவு 8 மணியளவில் மளிகைக் கடையில் இருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார் சீட். அப்போது திரு. நியோவுடன் வேலை செய்ததும், பின் அந்த வேலையை விட்டுவிட்டு திரும்பியதையும் நினைவுகூருந்துள்ளார். துணை அரசு வக்கீல் ஏஞ்சலா ஆங் பேசும்போது : “குற்றம் சாட்டப்பட்டவர், தனது முன்னாள் முதலாளி தனக்கு $500 சம்பளம் தர வேண்டியிருப்பதாக உணர்ந்து, அவர் மீது கோபம்கொண்டுள்ளர்.
உடனே சீட் அல்ஜூனிட் அவென்யூ 2ல் உள்ள பொதுக் கட்டண தொலைபேசிக்கு நிலையத்திற்கு சென்று திரு. நியோவின் அலுவலக எண்ணிற்கு அழைத்துள்ளார். தனது மூன்று மகன்களுடன் அலுவலகத்தில் இருந்த நியோ, அந்த அழைப்பிற்கு பதிலளித்துள்ளார்.
“குற்றம் சாட்டப்பட்டவர், அவரது முன்னாள் முதலாளியை கண்டபடி பேசியுள்ளார், அவருடைய தாயையும் கொச்சை வார்த்தைகளால் திட்டியதுமட்டுமல்லாமல், அவருடைய குடும்பத்தை கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இறுதியாக நான் போன் செய்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி போனை வைக்க அவரது மகன்களை கொண்டு போலீசில் புகார் அளித்துள்ளார் அந்த முதலாளி.
இறுதியில் புகாரை பெற்று போன் என்னை trace செய்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். 20 ஆண்டுக்கு முன்னாள் நடந்த விஷயத்தை தேவையின்றி கிளறி 500 வெள்ளிக்காக 2500 வெள்ளி அபராதம் கட்டியுள்ளார் அந்த நபர்.