சிங்கப்பூரின் UBI பகுதியில் உள்ள Housing and Development Board (HDB) வீடு ஒன்றின் கழிவறை சுவரை இடித்த பொழுது, சுவர்களுக்கு நடுவே கான்க்ரீட் கம்பிகளுடன் சில வகை மெத்தைகளுக்கு பயன்படுத்தப்படும் Foam பஞ்சுகளும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த 14 நொடி வீடியோ ஒன்று Facebook Group Complaint Singapore பக்கத்தில் பகிரப்பட்ட பிறகு, சமூக தளங்களில் அதிகம் ஷேர் ஆகி வருகிறது.
இந்த சூழலில், வீடியோ சிங்கப்பூர் Housing and Development Board (HDB) அதிகாரிகளின் கண்ணிலும் பட, நாங்கள் இதுகுறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று அறிவித்தது.
விசாரணைக்கு பிறகு, வீடியோ உண்மையில் Ubi இல் உள்ள HDB பிளாட்டில் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், சுவர் பேனல்களுக்கு இடையில் காணப்படும் Foam உண்மையில் பாலிஎதிலின் Foam என்று HDB தெளிவுபடுத்தியது.
பாலிஎதிலீன் Foam கட்டுமானத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
இது சிமென்ட் கலவையின் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் சாண்ட்விச் போல சேர்க்கப்பட்டு கம்பி வலையால் வலுவூட்டப்பட்டு “சாண்ட்விச் சுவர் பேனலை” (sandwich wall panel) உருவாக்குகிறது.
மேலும், அத்தகைய பேனல்கள் “கட்டிடத்தின் கட்டமைப்பு பாதுகாப்பை பாதிக்காது” என்றும் அவை உள் பகிர்வு சுவர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்றும் HDB விளக்கம் கொடுத்துள்ளது.