TamilSaaga
changi

“புகைபிடித்த அவரை மட்டும் ஏன் தண்டிக்கவில்லை” – சாங்கி ஏர்போர்ட்டில் இந்திய வம்சாவளி அதிகாரிகளிடம் வாதிட்ட நபர்..!

சிங்கப்பூரில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி அன்று சாங்கி விமான நிலைய முனையம் 1-ல், ஒதுக்கப்பட்ட இடத்தை விடுத்தது அதற்கு வெளியே புகைபிடித்ததாக கூறி அமலாக்க அதிகாரிகளால் ஒரு தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால் அதே அதிகாரிகள், தன்னை போல ஒதுக்கப்பட்ட இடத்தை விடுத்தது அதற்கு வெளியே புகைபிடித்த வேறு சிலர் மீது குற்றம்சாட்டவில்லை என்றும், காரணம் அவர்களும் அந்த அதிகாரிகளின் நாட்டை (இந்தியா) என்று கூறி அவர்கள் மீது குற்றம் சாட்டினார்.

பின்னர் அந்த நபர் தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) அதிகாரிகளைப் பின்தொடர்ந்து டெர்மினல் 1 புறப்பாடு முனையம் வரை சென்று தனது கேள்விக்கு பதில் அளிக்குமாறு கூறியுள்ளார். அதிகாரிகள் மேல் குற்றம் சாட்டிய அந்த நபர் வெளியிட்ட டிக் டாக் வீடியோவில், ஒரு பெண் அதிகாரி Departure பகுதியில் தனது அலைபேசியில் தன் மேற்பார்வையாளரிடம் பேசுவதைக் காண முடிந்தது. அதே நேரத்தில் செர்டிஸ் லேன்யார்டு அணிந்த ஒரு ஆண் அதிகாரியும் அந்த பெண்ணுக்கு அருகில் இருந்துள்ளார்.

இந்த விஷயத்தை படம் பிடித்துக்கொண்டிருந்த நபர், தன்னை ஒரு சீன ஆடவராக அடையாளம் காட்டிக் கொண்டார், மேலும் அந்த இரண்டு அதிகாரிகள் புகைபிடிக்க நியமிக்கப்பட்ட பகுதிக்கு வெளியே புகைபிடித்த போதிலும் “ஒரு இந்திய தம்பதியினரையும் ஒரு இந்திய ஆணையும் அபராதம் இல்லாமல் விடுவித்தனர்” என்று கூறுகின்றார். அதே நேரம், அதே தவறை செய்த தனக்கு அபராதம் விதித்து, தாங்கள் “இனவெறி” என்பதை காட்டியதாகவும் அந்த சீன நபர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் 70 வயது மூதாட்டியை 26 முறை குத்திக்கொன்ற பணிப்பெண் – தண்டனையை குறித்து உத்தரவிட கோர்ட்..!

இதைக்குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வருமாறு அழைத்தபோது, அந்த இரு அதிகாரிகள் தன்னுடன் வர மறுத்துவிட்டதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். கேமரா அந்த அதிகாரிகளை நோக்கி இருந்தாலும், அவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. டிக் டாக் செயலியில் இந்த வீடியோ ஆகஸ்ட் 25ம் தேதி வரை 6,71,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

Related posts