TamilSaaga

சிங்கப்பூர் Siloso Beach.. Bikini உடையில் வந்த பெண்களிடம் “சில்மிஷம்” செய்த நபர் – பெண்கள் செய்த தரமான சம்பவம்

சிலோஸா பீச்சில் தங்களைச் சுற்றிவந்த வாலிபரை சகோதரிகள் முற்றுகையிட்டு அவரது போனைப் பிடுங்கிப் பார்த்தபோது திகீர் அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அந்த அனுபவத்தை அவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள்.

சிலோஸா பீச்

சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த முக்கியமான பகுதி சிலோஸா பீச். சமீபத்தில் அந்த பீச்சுக்குச் சென்ற சகோதரிகள் இருவருக்கு ஏற்பட்ட அனுபவம் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்திருக்கிறது. இதுகுறித்து சகோதரிகளில் ஒருவர் ட்விட்டரில், தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். சகோதரிகள் இருவரும் பீச்சில் இளைப்பாறச் சென்றிருக்கிறார்கள். அப்போது வாலிபர் ஒருவர் அவர்களை இரண்டொரு முறை அங்குமிங்குமாகக் கடந்து சென்றிருக்கிறார். ஏதோ தவறான எண்ணத்தில்தான் அவர் தங்களைக் கடந்து போகிறார் என்பதை சகோதரிகள் இருவருமே உணர்ந்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள் : குடும்பம் காக்க சிங்கப்பூர் வந்த “தமிழக தொழிலாளி” : பணியிட விபத்தில் பறிபோன கால் – சிங்கப்பூர் கைவிடவில்லை

மொபைல் போனில் போட்டோ

பீச்சில் இருந்து தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாராகியிருக்கிறார்கள் அந்த சகோதரிகள். அப்போது, அந்த வாலிபர் தங்களை நோக்கி போனை உயர்த்தி கேமராவில் போட்டோ எடுப்பது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அந்த வாலிபரிடம் நேரடியாகவே சென்று இதுகுறித்து கேட்டிருக்கிறார்கள். அவர்கள் வாலிபரிடம் பேசுவதை வீடியோவாகப் பதிவு செய்து, அதுபற்றியும் 3 வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

முதலில் தான் எதுவும் செய்யவில்லை என்று அந்த வாலிபர் மறுக்கிறார். பின்னர், அவரின் போனைப் பிடுங்கி பரிசோதித்ததில் சகோதரிகளின் ஏழெட்டு போட்டோக்கள் அந்த போனில் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது அவர்களுக்குத் தெரியாமலேயே வாலிபரால் எடுக்கப்பட்ட போட்டோக்களாகும். முதல் வீடியோவில் அந்த இளம்பெண் வாலிபரின் போனைப் பிடுங்குகிறார். அதை அவரிடம் இருந்து திரும்பப் பெற அந்த வாலிபர் பின்பக்கமாக இளம்பெண்ணைப் பிடித்து இழுக்கிறார். `உனக்கெல்லாம் கேர்ள் ஃபிரண்டே இல்லையா… என்னைத் தொடாதே’ என்று இளம்பெண் கூச்சலிடுவதும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

அவரின் போனைக் கொடுக்க முடியாது என்றபடியே அந்தப் பெண் பேசுகையில், `இது என்ன… எங்களைப் போட்டோவே எடுக்கவில்லை என்று சொன்னாயே… என்னைத் தொடாதே.. என்னைத் தொடாதே… உன் போனைக் கொடுத்து விடுகிறேன். ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை போட்டோ எடுத்தால் இதுதான் நடக்கும். அருகில் வராதே… முகத்திலேயே குத்தி விடுவேன். உன்னுடைய கேர்ள் ஃப்ரண்ட் எங்கே’ என்று கேட்கிறார்.

மூன்றாவது வீடியோவில், அந்த வாலிபரை வேறொரு இடத்தில் சந்திக்கிறார்கள். அவர், தன்னை பெஞ்சமின் என்று சகோதரிகளிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ஆனால், பெஞ்சமின்தான் அவருடைய ஒரிஜினல் பெயராக இருக்கும் என்பதை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். பீச்சில் தான் செய்த செயல் குறித்து பேசும் அவர், `நான் செய்தது தவறுதான். அதைப் புரிந்துகொள்கிறேன்’ என்று சொல்கிறார். மேலும், தனக்கு கேர்ள் ஃப்ரண்ட் இருப்பதாகவும் அவர் ஒப்புக்கொள்கிறார்.

இதையும் படியுங்கள் : “48 சதவிகிதம் ஊதிய உயர்வு” – சிங்கப்பூரில் நீங்கள் “இந்த” துறையில் வேலை செய்தால்? MOM உங்களுக்கு தரும் “Good News” இதுதான்

வாலிபரின் மன்னிப்பு

இந்த சம்பவங்களுக்குப் பிறகு வீடியோக்கள் வைரலாகவே, அந்த வாலிபர் தங்களிடம் மன்னிப்புக் கேட்டதாக சகோதரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி மற்றொரு ட்வீட்டில், தனக்கு இன்ஸ்டாகிராம் வழியாக அந்த வாலிபர் மன்னிப்புக் கேட்டதாக ஸ்கிரீன்ஷாட் ஒன்றை இணைத்திருக்கிறார்கள். அதில், அந்த இளம்பெண்களின் செய்கை டிக்டாக் வீடியோ எடுப்பது போல இருந்ததாகவும், அதை போட்டோ எடுத்து அவர்களைத் தெரியுமா எனத் தனது நண்பர்களிடம் காட்டி விசாரிப்பதற்காக புகைப்படம் எடுத்ததாகவும் அந்த வாலிபர் சொல்லியிருக்கிறார். மேலும், அவர்களின் அனுமதி இல்லாமல் போட்டோ எடுத்ததற்காகவும் அதன்பிறகு முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்காகவும் அந்த இளைஞர் அவர்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

கட் ஃபீலிங்கால் தங்களைச் சுற்றி வந்த வாலிபர் ஒருவரைத் தைரியமாக வழிமறித்து கேள்வி எழுப்பியதும், பின்னர் அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவரின் முகத்திரையைக் கிழித்த சகோதரிகளின் செயல் சோசியல் மீடியாவில் வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts