TamilSaaga

உடலுறவை மேன்படுத்தும் Coffee.. உட்கொண்ட சிங்கப்பூரருக்கு “அந்த இடத்தில்” ஏற்பட்ட பிரச்சனை.. மருத்துவமனையில் அனுமதி – HSA கடும் எச்சரிக்கை!

சிங்கப்பூரில் 36 வயதான சிங்கப்பூரர் ஒருவர் Prime Kopi Pejuang 3 என்ற பாலியல் உறவை மேன்படுத்தும் coffee என்று கூறப்படும் தயாரிப்பை உட்கொண்டதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே 26 அன்று, Health Science Authority (HSA) மேற்குறிய அந்த தயாரிப்பு பற்றிய ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் மீது நடத்தப்பட்ட அவர்களின் சோதனையில், அதில் அறிவிக்கப்படாத செயற்கை ஆற்றல்மிக்க மருத்துவப் பொருளான தடாலாஃபில் அதிக அளவில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தடாலாஃபில் என்பது விறைப்புத்தன்மைக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆகும், ஆனால் இது மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஒருவர் எடுத்துக்கொளவது என்பது தவறு. ஆகவே Prime Kopi Pejuang 3ன் ஒரு பாக்கெட்டில் உள்ள தடாலாஃபிலின் அளவு, பொதுவாக பரிந்துரைக்கப்படும் அளவை விட “10 மடங்குக்கு மேல்” இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த மருந்தின் முறையற்ற பயன்பாடு மாரடைப்பு, பக்கவாதம், படபடப்பு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் Priapism உள்ளிட்ட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று HSA எச்சரித்துள்ளது. Priapism என்பது ஒரு நீண்ட நேரம் இருக்கக்கூடிய விறைப்புத்தன்மை ஆகும்.

சிங்கப்பூரில் கிரேன் கவிழ்ந்து விபத்து.. மேலும் ஒரு ஊழியர் பலி – தொழிலாளர்கள் உச்சகட்ட கவனத்துடன் பணிபுரிய வேண்டுகோள்!

Prime Kopi Pejuang 3ஐ உட்கொண்ட இரண்டு நபர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டது குறித்த தகவல் அறிந்தபிறகு HSA தற்போது தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு உடல் வலி, குளிர், ஒற்றைத் தலைவலி மற்றும் தாடையைச் சுற்றி இறுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மற்றொருவர் சுமார் நான்கு மணிநேரம் Priapismதை அனுபவித்தார் என்றும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த 36 வயது நபருக்கு ஆணுறுப்பில் கொப்பளம் மற்றும் எரிச்சல் ஏற்பட்டதோடு தாடை பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts