TamilSaaga

சிங்கப்பூர் – சென்னை – ஜூலையில் இருமார்கமாக செயல்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.

உலக அளவில் கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உலகின் பல நாடுகளில் இன்னும் முழுமையாக விமான சேவை அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல சிங்கப்பூர் அரசும் கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக பல நாடுகளுக்கு தங்களுடைய எல்லைகளை முடிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடான இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படும் நிலையில் சிங்கப்பூர் இந்தியாவிற்கு இன்னும் தனது எல்லைகளை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் அவசர தேவை உள்ளவர்கள் தற்போது சிங்கப்பூர் வந்து செல்கின்றனர். மேலும் இந்த சேவை கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிங்கப்பூர் முதல் சென்னைக்கும் அதேபோல சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கும் செல்லவிருக்கும் ஜூலை மாதத்திற்கான வந்த பாரத் சேவை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில் ஜூலை மாதம் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் (ஜூலை மாதம் அனைத்து திங்கள் கிழமைகளிலும்) 5 விமானங்கள் சிங்கப்பூர் முதல் சென்னை மற்றும் சென்னை முதல் சிங்கப்பூர் மார்க்கமாக செயல்படவுள்ளது.

இதற்கான டிக்கெட் முன்பதிவை அதிகாரப்பூர்வ ஏஜெண்டுகள் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் முன் பதிவு செய்யலாம்.

Related posts