சிங்கப்பூரில் ஜூலை 24 அன்று, புங்க்கோலில் உள்ள ஒரு மெக்டொனால்டு விற்பனை நிலையத்தின் பணியாளர் ஒருவரிடம் வாடிக்கையாளர் மோசமாக நடந்துகொண்டதாகவும் இழிவாக பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.
புகார் சிங்கப்பூர் என்ற பேஸ்புக் குழுவில் இது தொடர்பான செய்தியை பதிவேற்றியதன் படி, புங்க்கோலில் உள்ள ஒயாசிஸ் மொட்டை மாடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
50 விநாடிகள் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது அதில் ஆரம்பத்தில், அந்த மனிதன் பணத்தை திரும்பப்பெற கோரிக்கை வைக்கிறார்.
அப்போது அவர் பேசிக்கொண்டு இருந்த ஊழியர் அந்த மனிதர் ஏதற்காக துஷ்பிரயோகம் செய்கிறார் என்று கேள்வி எழுப்பி போலீஸை அழைக்கலாம் என்று கூறி அவரது பெயரை வழங்கும்படி கேட்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.
அதற்கு பதிலளித்த அந்த நபர், “இப்போதே காவல்துறையை அழைக்க முடியும்” என்று சத்தமாக கத்தியுள்ளார்.
பணியாளர் பெண் மீண்டும் பெயர் அல்லது தொலைபேசி எண்ணைக் கோரும்போது வாடிக்கையாளர் தர மறுத்ததோடு மட்டுமல்லாமல் தவவறாகவும் பேசுகிறார். பணியாளரை நோக்கி விரல் காட்டி சத்தமாக பேசியிருக்கிறார்.
இந்த புகாரானது காவல்துறையிடம் அளிக்கப்பட்டு தற்போது அந்த பணியாளர் பெண்ணை இழிவுபடுத்தி துன்புறுத்தியதற்கான விசாரனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.