TamilSaaga

சிங்கப்பூர் சிக்கன் விரும்பிகளுக்கு ஒரு “குட் நியூஸ்”.. உறைந்த கோழிகளை இறக்குமதி செய்ய மலேசியா முடிவு – தாறுமாறாக விலை குறைய வாய்ப்பு!

நமது அண்டை நாடான மலேசியா உறைந்த கோழிகளை சிங்கப்பூருக்கு மீண்டும் இறக்குமதி செய்யப் போகிறது, இதனால் எதிர்வரும் காலங்களில் கோழி இறைச்சியின் விலை இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாக ஊடங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சமீபத்திய முயற்சியை குறித்து மலேசிய தொழில்முனைவோரும், மலேசிய கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சருமான நோ ஓமர் அறிவித்தார்.

ஏன் உறையவைக்கப்பட்ட கோழியை இறக்குமதி செய்ய வேண்டும்?

உறைந்த கோழி “குறைந்த விலையில்” கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். மேலும் மலேசியாவில் போதுமான கோழி சப்ளை இருப்பதை உறுதி செய்வதற்காக உறைந்த கோழியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த ஜூன் 2022ல் மலேசியா, சிங்கப்பூருக்கு ஒரு மாதத்திற்கு 3.6 மில்லியன் கோழிகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தியதைத் தொடர்ந்து, விலையை நிலைப்படுத்தவும், உள்நாட்டில் விநியோக நிலையற்ற தன்மையை தக்கவைக்கவும் சிங்கப்பூர் உறைந்த கோழிக்காக இந்தோனேசியாவை நாடியது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் அதிகரித்த வெளிநாட்டு ஊழியர்களின் வருகை.. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் வெளியிட்ட MOM – இனி எல்லோருக்கும் நல்ல காலம் தான்

இந்த முயற்சி செப்டம்பரில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நோ ஓமர் கூறினார். மேலும் மலேசியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் உறைந்த கோழிகள் எங்கள் அமைச்சகத்தின் கூட்டுறவு கடைகள் அல்லது கூப்மார்ட் மூலம் விற்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எது எப்படி இருந்தாலும் மீண்டும் மலேசியா சிங்கப்பூருக்கான கோழி இறைச்சி இறக்குமதியை துவங்கவுள்ளதால் பெரிய அளவில் விலை வீழ்ச்சி ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts