ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு திரும்பும் பிரான்சில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது .
பயணத்திற்கான போக்குவரத்து ஒளி அமைப்பில் பரவலான மாற்றங்களின்படி, பிரான்ஸ் அம்பர்-பிளஸிலிருந்து ஆம்பருக்கு மாற்றப்படுகிறது.
கடந்த மாதம் COVID-19 பீட்டா மாறுபாடு பற்றிய கவலைகள் அதிகரிக்கத் தொடங்கியபோது பிரான்ஸ் ஆம்பர் பிளஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
மேலும், ஸ்பெயின் தற்போது அம்பர் பட்டியலில் இருக்கும். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை தனிமைப்படுத்தல் இல்லாதமல் தங்கள் பயணத்தை அனுபவிக்க உதவும்.
இந்தியா, பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவையும் சிவப்புப் பட்டியலில் இருந்து அம்பர் பட்டியலுக்கு மாற்றப்படும்.
ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் நோர்வே ஆகிய ஏழு நாடுகள் பசுமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என அறிவிப்பு வேளியாகி உள்ளது.