TamilSaaga

சிங்கப்பூரில் அசத்தலான உணவுகள் கிடைக்கும் மதுரை முனியாண்டி விலாஸ்… எங்கு எப்படி செல்வது? முழு விவரமும் இதோ

சிங்கப்பூரில் உள்ள மக்கள் தென் இந்திய, செட்டிநாடு மற்றும் வட இந்திய உணவுகளை சாப்பிட ஆசைப்பட்டால் உங்களுக்காகவே இருக்கிறது மதுரை முனியாண்டி விலாஸ்.

சிங்கப்பூரில் பெடோக் சவுத் அவன்யூ பகுதியில் இந்த உணவுக்கடை உள்ளது. இந்த கடையில் இந்திய பாரம்பரிய சைவ மற்றும் அசைவ உணவுகள் சிறந்த முறையில் ருசியான வகையில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

உணவகத்தில் உணவை பார்சலில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது வீடு தேடி டெலிவரி செய்யும் வசதியும் உள்ளது. இருந்த இடத்திலிருந்தே ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மதுரை முனியாண்டி விலாஸ் உணவு உங்கள் இல்லம் தேடி வரும் என அந்த கடை நிர்வாகம் அறிவித்துள்ளது.

டெலிவரி செய்யப்படும் பகுதிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் 40 ரூபாயில் இருந்து 55 ரூபாய் வரை டெலிவரி கட்டணமாக வசூலிப்பதாக கூறுகின்றனர்.

இந்த உணவுக்கடையானது காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை விற்பனைக்காக திறந்திருக்கும். இந்த தகவல்கள் அனைத்தும் நமது TamilSaagaSingapore மூலம் அலைபேசியில் கேட்டறியப்பட்டு மற்றும் கடையின் இணையதளம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அசத்தலான இந்திய செட்டிநாடு உணவு சாப்பிட விரும்பும் மக்கள் இந்த மதுரை முனியாண்டி விலாஸ் கடையை இனி பயன்படுத்திக்கொள்ளலாம்.

https://www.maduraimuniyandivillas.com/takeaway-food-delivery இணையதள முகவரி மூலமாக ஆன்லைனில் ஆர்டர் செய்தால் உணவு வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும்.

Related posts