சிங்கப்பூரில் வேலைக்காக செல்ல இருக்கும் ஊழியர்கள் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் நிறைய இருக்கிறது. அதை தெரிந்து கொண்டால் உங்கள் வேலைக்கான processல் பெரிய பிரச்னை என்பதே இருக்காது.
முதலில் வேலைக்காக செல்ல ஒரு ஏஜென்ட் வேண்டும். அந்த ஏஜென்ட் முடிந்த வரை உங்களுக்கு தெரிந்தவராக இருப்பதே நல்லது. ஏனெனில் சிங்கப்பூரில் வேலைக்காக சென்ற இடத்தில் அது சரியாக இல்லாமல் போனாலோ வேறு மாதிரியான பிரச்னை ஏற்பட்டாலோ உங்கள் குடும்பத்தால் அந்த ஏஜென்ட்டிடம் கேட்க முடியும். அதை முதலில் தெளிவாக இருந்தாலே பல பிரச்னைகள் இல்லாமல் போய் விடும்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் Tourist விசாவில் வந்து வேலை செய்யும் ஐடியால இருக்கீங்களா? சிறை தண்டனை மட்டுமல்ல பெரிய தொகை கூட அபராதம் இருக்கும்… சிக்கிய சிலர்!
சிங்கப்பூரில் SPass அப்ளே செய்யும் போது நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் உண்மையானதாக இருக்க வேண்டும். முடிந்த வரை அதில் Fake அடிக்காமல் இருப்பதே உங்களால் பல நாட்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து இருக்க வேண்டும். சிங்கப்பூர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்த டிகிரிகள் மட்டுமே செல்லும்.
Background Screening Companyல் கல்வி தகுதிகள் செக் செய்யப்பட்டு இருப்பதும் முக்கியம். கண்டிப்பாக சான்றிதழ்களை நோட்டரி சான்றளிக்கப்பட்டு இருக்க கூடாது. அப்படி சான்றளிக்கப்பட்ட சான்றுகள் செல்லாது.
டிப்ளமோ படித்தவர்களோ, டிகிரி படித்தவர்களோ கண்டிப்பாக பாஸ் அப்ளே செய்யும் போது ஆன்லைன் வெரிவிகேஷன் ரிப்போர்ட் கொடுக்கப்பட வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட Background screening companies:
- Avvanz International Background Checks
- Cisive
- Dataflow
- eeCheck
- HireRight
- Risk Management Intelligence (RMI)
- Sterling RISQ
- Veremark
மேற்கூறப்பட்ட நிறுவனங்களின் மூலம் நீங்கள் சமர்பிக்கப்பட்ட கல்வி சான்றிதழின் நிலை, ஆண்டுகள் செக் செய்யப்படும். அது சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களின் spass அப்ளிகேஷன் அப்ரூவல் மேலும் எளிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.