TamilSaaga

பிரான்சில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய தளர்வுகள்

பிரான்ஸ் நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ள நிலையில் நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்களை தற்போது பார்க்கலாம்.

கொரோனா பரவல் காரணமாக உலக அளவில் பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் பிரான்ஸ் நாட்டிலும் ஊரடங்கு விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் இரவு நேர ஊரடங்கு மிகவும் கடுமையான முறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்குவதாக அரசு அறிவித்துள்ளது.

இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது, இதன் அடிப்படையில் இரவு ஒன்பது மணிக்கு மேல் மக்கள் எந்தவித ஆவணமும் இன்றி வெளியே செல்லலாம். உணவகங்கள் 11 மணிக்குப் பின்னரும் திறந்திருக்கலாம்.

உணவகத்திற்கு வெளியில் 100 சதவீத இருக்கைகளும், உணவகத்திற்கு உள்ளே 50 சதவிகித இருக்கைகளும் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இரவு நேர காட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருக்கைகளில் 60 சதவீதம் பேர் மட்டுமே அமர்ந்து படங்களை பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றபோதிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மேலும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

Related posts