சிங்கப்பூரில் பரவி வரும் நோயின் அறிகுறிகள் இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருந்தொற்றுக்கு எதிராக தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் சிங்கப்பூர் தற்போது வைரஸுடன் வாழ்வதை நோக்கி நகரும் கட்டத்தில் உள்ளது என்று தொற்று நோய் நிபுணர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். தங்குமிடங்களில் பெருந்தொற்று வழக்குகள் அதிகரித்த பிறகு இந்த செய்தியானது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் தேசிய யோங் லூ லின் School of Medicinesஐ சேர்ந்த பேராசிரியர் டேல் ஃபிஷர், “தங்குமிடங்கள் தொற்று நோய் பரிமாற்ற மையங்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை, அங்கு நிலவும் நிலைமைகளும் கணிசமாக அளவில் மேம்படவில்லை”. “தங்குமிடங்களில் பல அறிகுறியற்ற நோய்த்தொற்றுகள் கண்டறியப்படுவதால், தொழிலாளர்களும் தவறாமல் சோதிக்கப்படுகிறார்கள்” என்றார் அவர். “இந்த வைரஸ் என்பது மிகவும் சுதந்திரமாகப் பரவும், ஆனால் அதற்காக ஒரு சில முறை மட்டுமே ஏற்படும் கடுமையான நோய்க்காக அறிகுறியற்ற நபர்களைத் தொடர்ந்து சோதிப்பது பயனளிக்காது. ஏனெனில் இது சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளுடன் சேர்ந்து தேவையற்ற தனிமைப்படுத்தலுக்கு வழிவகுக்கிறது.” என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் கடந்த அக்டோபர் 2 அன்று வெளியிட்ட அறிக்கையில், “வழக்கமான சோதனைக்கு ஆன்டிஜென் விரைவு சோதனைகளை (ARTs) மட்டுமே பயன்படுத்துவதாக கூறியது. இந்த முடிவுகள் 30 நிமிடங்களில் கிடைக்கும் ஆனால் PCR சோதனைகளை விட குறைவான அளவில் துல்லியமானது என்பதும் நினைவுகூரத்தக்கது. அதேசமயம் PCR சோதனைகளின் முடிவுகள் பெற ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஆகும் என்பது நாம் நினைவில்கொள்ளவேண்டிய விஷயம்
சா ஸ்வீ ஹாக் School of Public Healthன் துணை டீன் மற்றும் அசோசியேட் பேராசிரியர் அலெக்ஸ் குக் பேசும்போது, “வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்யும், ஆனால் எந்த அறிகுறிகளும் இல்லாத முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட தொழிலாளர்கள். 10 நாட்கள் வரை தங்குமிடங்களுக்குள் ஒரு பிரத்யேக இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டு மீட்க முடியும்” என்றார். “அதேபோல எதிர்மறையான ART முடிவைப் பெற்ற பிறகு அவர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு வெளியேற்றப்படலாம்” என்றும் தெரிவித்தார்.