TamilSaaga

“Boy Friend இருக்காரா?”.. 27 வயது பெண்ணுக்கு தனது நகைச்சுவையால் பாடம் புகட்டிய சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ – யாருமே பார்த்திராத அவரது “Sense of Humor”

உலக நாடுகள் இன்று சிங்கப்பூரை வியந்து பார்க்கிறது என்றால் அது கடந்த சில நூற்றாண்டுகளில் நமது சிங்கப்பூர் அடைந்த அசுர வளர்ச்சியே காரணம். நமது சிங்கையின் அரசியல் கட்டமைப்பு அதன் அசாத்திய பலமென்றே கூறலாம். அந்த வகையில் நமது சிங்கப்பூரை எழில்மிகு நாடக மாற்றிய பெருமை பலருக்கு உண்டு அதில் முதன்மையானவர் தான் லீ குவான் யூ நமது தேசத்தின் தந்தை. தனது வாழ்க்கை முழுவதையுமே நாட்டுக்காக அர்ப்பணித்த அந்த மனிதன் தனது குடும்ப வாழ்க்கையிலும் எந்தவித சமரசமும் செய்துகொண்டதில்லை.

இதெல்லாம் பள்ளி விடுமுறையின் போதுதான் நடக்கிறது : சிங்கப்பூரில் மர்மமான முறையில் உடைக்கப்படும் ஜன்னல்கள் – மக்களே உஷார்!

அரசியல் சாணக்கியன், மக்களின் பாதுகாவலர், சிங்கப்பூரின் தந்தை என்று நாம் பிரமிக்கும் பல செயல்களை செய்த லீ குவான் யூ உண்மையில் குறும்பு செய்வதிலும் மன்னன் தான். அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது தான் அவர் பங்கேற்ற கருத்தரங்கம், பல நூறு மாணவர்கள் ஒருங்கே அமர்ந்திருந்த அரங்கில் ஒரு மாணவியிடம் அவர் குறும்புத்தனமாக கேட்ட கேள்விகள் இணையத்தில் பிரபலம். ஆனால் லீ குவான் குறும்புத்தமனாக கேள்விகளை கேட்டாலும் இறுதியில் அவர் சொன்ன பாடம் அந்த அரங்கில் இருந்த மாணவர்களை சிரிக்கவைத்தது மட்டும் இல்லாமல் சிந்திக்கவும் வைத்தது.

லீ குவான் யூ நகைச்சுவையாக பேசிய அந்த காணொளி

லீகுவான் பங்கேற்ற அந்த கருத்தரங்கில் இருந்த ஒரு மாணவியிடம் உங்கள் வயது என்ன என்று கேட்கிறார் லீ. அதற்கு அந்த பெண் 27 என்று கூற, சற்றும் யோசிக்காமல் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்றும் கேட்கிறார். அரங்கில் இருந்த மற்ற மாணவர்கள் சத்தமாக சிரிக்க அந்த மாணவி எனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறுகிறார். பிறகு லீ குவான், நீங்கள் PhD படித்து முடிக்க எத்தனை ஆண்டுகள் தேவைப்படும்? என்று மறுபடியும் கேட்கிறார்.

இரண்டு ஆண்டுகள் என்று அந்த மாணவி கூற, அப்படி என்றால் நீங்கள் PhD படித்து முடிக்கும் பொழுது உங்களுக்கு வயது 29 ஆகிவிடும், சரி உங்களுக்கு Boy Friend யாரேனும் இருக்கிறார்களா? என்று கேட்க அரங்கில் இன்னும் அதிகமான சிரிப்பலை எழுகிறது. அதற்கும் அந்த பெண் இல்லை என்று கூற, லீ குவான் தனது அட்வைஸ்சை சொல்லத்துவங்கினர். குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது 35, அதற்கு மேல் சென்றால் உடல் குறைபாடு உள்ள பிள்ளைகள், மன நோய் சம்பந்தமான குறைபாடு உள்ள பிள்ளைகள் பிறக்கும் விகிதம் அதிகமாகும்.

சிங்கப்பூரில் 4 ஆண்டுகள் நான் ஏறாத கம்பெனி இல்ல.. ஆனால் இன்று, எனக்கு தடையேதும் இல்ல – “சொல்லியடித்து சாதித்த பெண்”

ஆகையால் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் PhD நீங்கள் படித்து முடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல தான் வாழ்க்கையில் சிறந்த நேரத்தில் திருமணம் செய்து கொள்வதும். உங்களுக்கு நல்ல Boy Friend கிடைக்கவும் PhDயை நீங்கள் விரைவில் முடிக்கவும் வாழ்த்துகிறேன் என்று கூறு அமர்கிறார் லீ குவான் யூ. இதுபோல லீ குவான் யூ நகைச்சுவை உணர்வோடு பேசுவதை காண்பது அரிது என்பது ஒருபுறம் இருந்தாலும் ஒரு மனிதன் தனது குடும்ப வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை இந்த நிகழ்வில் உணர்த்தியுள்ளார் அவர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts