சிங்கப்பூரில் நேற்று மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் 2021ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான தொழிலாளர் சந்தை மேம்பட்ட மதிப்பீடுகளைப் பெற்று வளர்ந்து வருவதாக தெரிவித்தார். அதே சமயம் நடப்பில் இருக்கும் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்பு சதவிகிதம் வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இருப்பினும் வேலையின்மை விகிதங்கள் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றன என்று சிங்கப்பூரின் பிசினஸ் டைம்ஸ் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. தற்போது நடப்பில் இருக்கும் இரண்டாம்கட்ட கட்டுப்பாடுகள் இதற்காக காரணமாக கூறப்படுகிறது.
வேலைவாய்ப்பு வளர்ச்சி ஊக்கத்தொகை போன்ற நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் பணியமர்த்தலை அரசாங்கம் தொடர்ந்து ஆதரிக்கும்என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழில், திட்டங்கள் மற்றும் SGUnited வேலைகள், திறன் தொகுப்பின் கீழ் உள்ள முயற்சிகள், வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகளைப் பெற முடியும்.
அதே நேரத்தில், பெருந்தொற்று தாக்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் இந்த வேலையில்லா நேரத்தை தங்கள் வணிகங்களை மாற்றுவதற்கான வாய்ப்பாகவும், பணியுக்திகளை மறுவடிவமைப்பு செய்வதற்கும், தங்கள் ஊழியர்களை மீண்டும் சேர்த்துக்கொள்வதற்கும் நாம் ஊக்குவிக்கிறேன் என்று கூறியுள்ளது மனிதவள அமைச்சகம்.