TamilSaaga

“தளர்வுபெற்றது பல நாள் தடை” : இன்று முதல் சில கட்டுப்பாடுகளுடன் இந்தியர்கள் சிங்கப்பூர் வரலாம்

உலக அளவில் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை தற்போது சிங்கப்பூர் தளர்த்தியுள்ளதால், இந்தியர்கள் இன்று முதல் மீண்டும் சிங்கப்பூர் செல்ல முடியும். இந்தியாவைத் தவிர, மற்ற ஐந்து தெற்காசிய நாடுகளை தனது பயணக் கட்டுப்பாடு பட்டியலில் இருந்து நீக்குவதாக சிங்கப்பூர் அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

“வங்கதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு 14 நாள் பயண வரலாற்றைக் கொண்ட அனைத்து பயணிகளும் சிங்கப்பூர் வழியாக நுழையவோ அல்லது செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிங்கப்பூர் அரசு முன்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது மேற்குறிப்பிட்ட நாடுகளில் மேன்மையடையும் பெருந்தொற்று நிலையால் வங்கதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு 14 நாள் பயண வரலாற்றைக் கொண்ட அனைத்து பயணிகளும் சிங்கப்பூருக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இந்த பயணிகள் வகை IV எல்லை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். வகை II, VTL பயண பாதை, III மற்றும் IV வகை நாடுகளில் உள்ள அனைத்து பயணிகளும் இனி-வருகையின்போது PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை. அவர்கள் SHN சேவையை முடிக்கும்போது PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். வகை IV நாடுகள்/பிராந்தியங்களில் இருந்து வரும் பயணிகள்10 நாள் SHNக்கு சிங்கப்பூரில் உள்ள பிரத்யேக SHN வசதிகளில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டைநாடான இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பன்னாட்டு விமான சேவை தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts