TamilSaaga

கொரியாவில் 1200 கடைகள்.. கொடிகட்டி பறக்கும் Mom’s Touch : சிங்கப்பூருக்கு Bye சொன்னது ஏன்? – நிறுவனம் எடுத்த தீடீர் முடிவு

கொரிய நாட்டு துரித உணவு நிறுவனமான Mom’s Touch, அதன் ஆபரேட்டரான “No Signboard” நிறுவனம், அதன் கூடுதல் பொறுப்புகள் காரணமாக வணிகத்தைத் தொடர முடியாது என்று அறிவித்ததை அடுத்து, நேற்று பிப்ரவரி 10 Mom’s Touch நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள அதன் அனைத்து விற்பனை நிலையங்களையும் திடீரென மூடியது. நேற்று பிப்ரவரி 10ம் தேதியன்று மூன்று Mom’s Touch அவுட்லெட்டுகளும் செயல்படுவதை நிறுத்திவிட்டன, அதே நாளில் அவர்களது சமூக தளங்களில் ஒரு அறிவிப்பும் உடனடியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட உடல்? : வெலவெலத்துப் போன தொழிலாளி – போலீசார் வந்ததும் வெளிச்சத்திற்கு வந்த “Twist”

அந்த அறிவிப்பில் காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் சிங்கப்பூரில் அனைத்து Mom’s Touch நிறுவனங்களும் மூடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனமானது தென் கொரியாவில் 1,200க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ளது, மேலும் Fired Chicken மற்றும் Burger வகைகளுக்கு மிகவும் புகழ்பெற்ற கடையாக இது திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Mom’s Touch ஆனது நமது சிங்கப்பூரில் The Centrepoint, Paya Lebar Quarter மற்றும் Eastwood Center ஆகிய இடங்களில் மூன்று விற்பனை நிலையங்களைக் கொண்டிருந்தது. உலக அளவில் பிரபலமான உணவக ஆபரேட்டர் No Signboard நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹாக்கர் QSRன் கீழ் தான் Mom’s Touch செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தான் தி பிசினஸ் டைம்ஸ் அளித்த தகவலின்படி, கடந்த பிப்ரவரி 9 அன்று, ஹாக்கர் QSR அதன் அதிக பொறுப்புகள் காரணமாக தங்களால் வணிகத்தைத் தொடர முடியவில்லை என்று அறிவித்தது.

தவறான சிகிச்சை.. சிங்கப்பூரில் உயிரிழந்த இந்திய கட்டுமான ஊழியர்.. மருத்துவருக்கு வெறும் 1,500 டாலர் அபராதம்!

கடனாளர்களின் தன்னார்வ கலைப்பைப் பின்பற்றுவதாகவும் ஹாக்கர் QSR கூறியது. ஒரு வாரத்திற்கு முன்பு, சிங்கப்பூரின் Paya Lebar மற்றும் Centre point ஆகிய இடங்களில் உள்ள அதன் இரண்டு Mom’s Touch outletகளுக்கு S$176,000 செலுத்தப்படாத வாடகை மற்றும் பிற நிலுவைத் தொகைகள் காரணமாக நில உரிமையாளர்களிடமிருந்து நோ சைன்போர்டு நிறுவனம் கோரிக்கைக் கடிதங்களைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts