TamilSaaga

“விரைவில் பலன் தரும்” : சிங்கப்பூரின் Kallang Dormitoryயில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் புதிய முயற்சி – புகைப்படங்கள் உள்ளே

“சிங்கப்பூரில் நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் தங்கள் தினசரி உணவை தாங்களே தயார் செய்துவரும் நிலையில். FAST அதிகாரிகள், FACE என்று அழைக்கப்படும் ACE குழுவின் நண்பர்கள், சிங்கப்பூரில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் 85 கல்லாங் விடுதியில் உள்ள தங்குமிட மேற்பார்வையாளர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் சொந்த காய்கறிகளை தாங்களே வளர்க்க ஒரு தோட்டத் திட்டத்தை தற்போது தொடங்கியுள்ளனர்” என்று மனிதவள அமைச்சகம் வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

மிளகாய், பாகற்காய் மற்றும் வெள்ளரி ஆகிய செடி கொடிகள் வளர்க்கப்படுகின்றன, ஏனெனில் இவை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதாகும். இந்த செடிகொடிகளை வளர்ப்பதற்கான தொட்டிகள் தங்குமிட ஆபரேட்டரால் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் FACE தன்னார்வலர்கள் மற்றும் தங்குமிடம் மேற்பார்வையாளர்கள் தங்களுடைய முந்தைய தோட்டக்கலை அனுபவத்துடன் தோட்டக்கலை உதவிக்குறிப்புகளைப் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் முகநூல் பதிவு

இந்த முயற்சியில் சேர FACE தன்னார்வலர்களும் தங்கள் அறை தோழர்களை திரட்டிவருகின்றனர். “உழைப்பின் பலன்கள் நிச்சயம் நல்ல சுவை தரும் என்பதால் அறுவடைக்காக காத்திருக்கிறோம்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் தற்போது விடுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களிடையே தெற்றின் அளவு சற்று அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ப்ளூ ஸ்டார் விடுதியில் தொடர்ச்சியாக தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts