சிங்கப்பூரில் உள்ள கோ-கார்ட் ஆர்வலர்கள் அனைவருக்கும் புக்கிட் திமாவில் அமைந்துள்ள கார்ட்டிங் ரேஸ் டிராக்கை பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள். இந்நிலையில் விரைவில், தி கார்ட்டிங் அரங்கம் ஜூரோங்கில் தனது இரண்டாவது ட்ராக்கை திறக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஆகஸ்ட் 2021லன் இறுதியில் இது திறக்கத் திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 1,53,000 சதுர அடி பரப்பளவில், 11 தொழில்நுட்ப திருப்பங்களுடன் 700 மீ நீளமுள்ள ட்ராக்கை மக்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. இது ஒரு பெரிய இடம் என்பது ஒரே நேரத்தில் சுமார் 30 கோ-கார்ட்ஸ் வரை குழு நிகழ்வுகளில் செயல்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பந்தய வீரர்களுக்கான VIP லவுஞ்ச், தனி கேரேஜ் அலகுகள், ஹெல்மெட் கிருமிநாசினி நிலையம், லாக்கர்கள் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது இந்த நிலையம். மேலும் சாதாரண மோட்டார்ஸ்போர்ட் ஆர்வலர்களுக்கான இடமாக இருப்பதைத் தவிர, ஜூரோங்கில் தொழில்முறை பந்தய ஓட்டுனர்களின் பரிந்துரைகள் மற்றும் தொழில்முறை பந்தய நிகழ்வுகளை நடத்த வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஸ் கண்ட்ரோல் ரூம், டிராக் கேமராக்கள் மற்றும் இரண்டாவது மாடியில் இருந்து பார்வையாளர்கள் பார்க்கும் கேலரியும் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கார்டிங் விகிதங்கள் புதியவர்களுக்கு (குறைந்தபட்சம் 9 வயது மற்றும் 140 செமீ உயரம்) ஒரு அமர்வுக்கு 25 வெள்ளி மற்றும் பெரியவர்களுக்கு ஒரு அமர்வுக்கு 35 வெள்ளி வசூலிக்கப்படும்.