TamilSaaga

சிங்கப்பூரில் மோசடி செய்த மலேசிய கும்பல்… சுற்றி வளைத்த காவல் துறை

மலேசியாவை சேர்ந்த ஒரு கும்பலானது சிங்கப்பூரில் சுமார் 250க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி பணம் பறித்துள்ளது.

இணையத்தில் பொருட்களை வாங்குவதன் மூலமாக வியாபாரிகளின் இணையதள மதிப்பை உயர்த்தலாம் என ஆசை காட்டி வேறொரு புதிய வங்கிக் கணக்குக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய சொல்லி மோசடியில் ஈடுபட்டுள்ளது. வேலைக்காக இவர்களை நம்பி பணம் செலுத்தி ஏமார்ந்துள்ளார்கள்.

ஜீன்.21 திங்கள் கிழமை அன்று சிங்கப்பூர் மற்றும் மலேசிய காவல்துறை 3-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய சோதனையில் 11 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் கொண்ட கும்பல் சிக்கியதாக அறிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் 15 வயது முதல் 28 வயது வரை உள்ள நபர்கள். இவர்களிடமிருந்து பரிசோதனையில் 40-க்கும் மேற்பட்ட தொலை தொடர்பு கருவிகள் மற்றும் 7-க்கும் மேற்பட்ட லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்படுள்ளதாக சிங்கப்பூர் மற்றும் மலேசிய காவல்துறை கூட்டாக அறிவித்துள்ளனர்.

Related posts