TamilSaaga

போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வில் சிங்கப்பூர் பள்ளிவாசல்கள்

சிங்கப்பூரில் இருந்துவரும் போதை பொருள் பழக்கத்தை எதிர்த்து, விழிப்புணர்வு ஏற்படுத்த செயல்படும் இயக்கமானது தற்போது 71 பள்ளி வாசல்களில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகள் வைத்து செயல்பட துவங்கியுள்ளது.

2017ல் இருந்து செயல்பட்டு வரும் இந்த இயக்கமானது கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 15 பள்ளி வாசல்களில் இந்த விழிப்புணர்வை செய்தது.

போதை பழக்கம் மற்றும் சட்ட விரோத கடத்தல் போன்ற செயல்முறைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்வைக்கும் வகையில் அனைத்துலக தினத்துக்கு முதல் நாள் இந்த விழிப்புணர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மக்கள் ஆரோக்யமான வளமான வாழ்க்கையை வாழ வேண்டும். போதை பொருள் பயன்படுத்துவது உடலுக்கும் சமூகத்துக்கும் கேடு என்று பள்ளிவாசல் சமயம் சார்ந்த உரையின்போது எடுத்துரைக்கப்பட்டது.

இது போன்ற விழிப்புணர்வு முயற்சிகளுக்கு பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய சமய அமைப்புகள் நெருங்கி பணியாற்றுவதை இந்த விழிப்புணர்வு இயக்கம் உறுதிப்படுத்தி இருப்பதாக உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Related posts