இன்று ஜனவரி 25 அன்று அதிகாலை 12.25 மணியளவில், சிங்கப்பூரின் Jalan Samulun என்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உடனடியாக இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் Siloso Beach.. Bikini உடையில் வந்த பெண்களிடம் “சில்மிஷம்” செய்த நபர் – பெண்கள் செய்த தரமான சம்பவம்
SCDF படையினர் தீயை அணைக்கும் பணியை மேற்கொள்ள, புகை மூட்டமான சூழலில் செல்ல, சுவாசக் கருவிகளை அணிய வேண்டியிருந்தது. வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்த 30 நிமிடங்களில் அந்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மொத்தம் 40 தீயணைப்பு வீரர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் மற்றும் இந்த தீயணைப்பு நடவடிக்கையின்போது, நான்கு நீர் ஜெட்கள் மற்றும் ஒரு ஆளில்லா தீயணைப்பு இயந்திரம் (UFM) தீயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டது. நுரை கழிவுகளின் மேற்பரப்பை மறைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது, இது ஆழமான இடத்தில் இருக்கும் தீக்கு மிகவும் பயனுள்ள தீயணைக்கும் உத்தியாகும். அதிகாலை 3 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
SCDF வருகைக்கு முன் அங்கு இருந்த மூன்று தொழிலாளர்கள் தாங்களாகவே வெளியேறினர். இதனால் இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. Damping down முறையை பயன்படுத்தி இந்த தீ அணைக்கப்பட்டது என்று SCDF தெரிவித்தது . Damping Down என்பது நெருப்பை அணைத்த உடனேயே ஈரமான எரிந்த மேற்பரப்பில் தண்ணீரைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. இது வெப்பமான எரிந்த பரப்புகளில் இருந்து தீ மீண்டும் எழுவதைத் தடுக்கும்.