கொரோனா பரவல் உலகம் முழுவதும் அதிகரித்து உள்ள இந்தவேளையில் பல நாடுகளில் பன்னாட்டு விமான சேவையும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று அதிகமாக காணப்படும் நாடுகளில் இருந்து பயணிகளை வரவேற்கவும் உலக அளவில் பல நாடுகள் விரும்புவதில்லை.
இதனால் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிங்கப்பூரும் தங்களுடைய எல்லையை இன்னும் பல நாடுகளுக்கு திறக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் மக்களுக்கு தனிமைப்படுத்துதலில் சில தரவுகளை அறிவித்துள்ளது சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம். அதன் அடிப்படையில் இனி தொற்று பரவல் அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்புவோர் 21 நாட்களுக்கு பதிலாக 14 நாட்கள் மட்டுமே அரசு தெரிவிக்கும் இடங்களில் தனிமைப்படுத்தல் வைக்கப்படுவர்.
ஏப்ரல் மாதத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருபவர்களுக்கு 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இந்த 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலகட்டத்தில் PCR முறை சோதனையை தாண்டி 3,7 மற்றும் 11ம் நாள்களில் ரேப்பிட் கிட் பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.