TamilSaaga

சிங்கப்பூருக்கு வரும் இந்தியர்களா நீங்க… இங்கையும் RT-PCR எடுக்கணுமா? புதிய அறிவிப்புகளா? குழம்பாம இதை படிங்க

சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு PCR டெஸ்ட் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், சிங்கப்பூர் செல்லும் பயணிகளுக்கும் நிறைய குழப்பங்கள் உருவாகி வருகிறது. இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் போது தொற்று பரவலுக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற குழப்பத்தில் இருந்தால் இந்த பதிவு உங்களுக்காக தான்.

இந்தியாவில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் இருந்து வருவோர் கண்டிப்பாக RTPCR டெஸ்ட் எடுத்து அதை 72 மணி நேரத்திற்கு முன்னர் ஏர் சுவேதாவில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் கட்டுப்பாடுகளை போல சிங்கப்பூர் இதுவரை எந்த வித புதிய கட்டுப்பாடுகளையுமே விதிக்கவில்லை.

VTFல் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 1ல் அறிவிக்கப்பட்டதை போல முழுமையாக தடுப்பூசி போட்டு இருக்கும் இந்திய பயணிகள் எந்தவித குவாரண்டைன் மற்றும் டெஸ்ட் இல்லாமல் சிங்கப்பூரினுள் நுழைய முடியும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் இந்திய ஊழியர்களுக்கு வேலை நேரம் எப்படி இருக்க வேண்டும்? இதற்கு சம்பளம் எப்படி கொடுப்பார்கள்? வாழ்க்கை ஒன்னும் அவ்வளவு ஈசி இல்ல பாஸ்!

சரி தடுப்பூசி முழுமையாக செலுத்தாத பயணிகளுக்கு இதில் என்ன விதமான கட்டுப்பாடுகள் இருக்கும் என்றால் அவர்களுக்கு சில விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. புறப்படுவதற்கு முந்தைய RT-PCR அல்லது ART சோதனை அறிக்கையை வைத்திருந்தால் அவர்களுக்கும் குவாரண்டைன் இருக்காது. இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு சிங்கப்பூர் கட்டுப்பாடுகளின் நிலையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிங்கப்பூர் முழுவதும் சோதனை வசதிகள் பரவலாகவும் எளிதாகவும் இயங்கி வருகிறது. இதனால் பயணிகள் அனைவரும் எளிதில் டெஸ்ட் எடுத்துவிட முடியும் எனவும் கூறப்படுகிறது. சிங்கப்பூருக்கு கடந்த நவம்பர் வரை 5.37 மில்லியன் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு சென்றதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இதனால் அதிக சுற்றுலா வரும் பயணிகள் எந்தவித பயமும் இல்லாமல் வந்து செல்ல முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts