சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது, கடந்த சில நாட்களில் இல்லாத அளவில் தொற்றின் அளவு என்பது மிகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் சுகாதார அமைச்சகம் அதிரடியாக சில தளர்வுகளை திரும்பப்பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில் வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி நாட்டில் பல விஷயங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. குறிப்பாக உணவகங்களில் மக்கள் அமர்ந்து உண்ண அனுமதி கிடையாது. ஆனால் பார்சல் மற்றும் டெலிவரி போன்ற சேவைகளுக்காக உணவகங்கள் இயங்கலாம்.
திரையரங்குகளுக்கு அனுமதி உண்டா?
திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்படும், நிகழ்வுக்கு முந்தைய சோதனை செய்துகொண்டவர்கள் (PET) மூலம் 100 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள். நிகழ்வுக்கு முந்தைய சோதனை (PET) இல்லாமல் 50 பேர் வரை அனுமதிக்கப்படலாம்.
மேலும் உங்களுக்கு தேவைப்படும் உணவு மற்றும் பண்பொருட்களை நீங்கள் தான் கொண்டுவரவேண்டும். திரையரங்குகளில் அவை விற்பனை செய்யப்படமாட்டாது. நேரடி நிகழ்ச்சிகள் அல்லது MICE நிகழ்வுகளுக்கு, நிகழ்வுக்கு முந்தைய சோதனை மூலம் 100 பேர் வரை அனுமதிக்கப்படலாம். சோதனை இல்லாமல், 50 பேர்வரை கூடலாம்.
பேச்சாளர்கள் மற்றும் கலைஞர்கள் தங்கள் முகமூடிகளை அகற்ற அனுமதிக்கப்படமாட்டார்கள்.