TamilSaaga

“Interchange MRT” நிலையத்தின் கட்டுமானப்பணி ஆரம்பம் – LTA முக்கிய அறிவிப்பு

சிங்கப்பூரின் கிராஸ் ஐலேண்ட் லைனில் உள்ள ஆங் மோ கியோ Interchange MRT நிலையத்தின் கட்டுமானப் பணி வருகின்ற 2021 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் தொடங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) நேற்று (ஜீலை.20) அறிவித்துள்ளது.

கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்று 2030 ஆம் ஆண்டில் பயணிகளுக்கான சேவைகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கட்டுமானம் முடிக்கப்படும்போது நிலையம் கிராஸ் தீவு மற்றும் வடக்கு-தெற்கு பகுதிகளுக்கு இடையே ஒரு பரிமாற்றம் நிலையமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AMK Hub, Ang Mo Kio Integrated Transport Hub and Ang Mo Kio Town Garden East ஆகிய தொகுதிகளை நேரடியாக இணைக்கும் நுழைவாயிலாக அமையும் என கூறப்ப்பட்டுள்ளது.

புதிய நுழைவாயில்களில் ஆங் மோ கியோ அவென்யூ 3 மற்றும் ஆங் மோ கியோ அவென்யூ 8 ஆகியவை அண்டர்பாஸ் வழியாக இந்த நிலையத்துடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts