TamilSaaga

Exclusive : சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு ஊழியர்கள் – தனிநபர் இன்சூரன்ஸ் எடுப்பதில் என்ன நன்மை? – சிறப்பு பார்வை

வெளிநாடுகளில் வேலை செய்து வரும் ஊழியர்கள் இங்கு தனிநபர் இன்சூரன்ஸ் எடுப்பது அவர்களுக்கு எந்த அளவில் நன்மை பயக்கும் என்பதை நாம் இந்த பதிவில் காணலாம். உத்தரமாக இந்தியாவில் இருந்து நமது சிங்கப்பூருக்கு தொழில் ரீதியாக ஒருவர் வருகின்றார் என்றால் நிச்சயம் அவருக்கு இன்சூரன்ஸ் பதிவு செய்த பிறகே இங்கு அழைத்து வருவது வழக்கம். அப்படி இருக்கும்பட்சத்தில் நாம் ஏன் தனியாக மீண்டும் தனிநபர் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்? அதனால் என்ன நம்மை என்று பலருக்கும் ஒரு கேள்வி எழுவது சகஜம் தான்.

நிறுவங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு இன்சூரன்ஸ் எடுத்து செல்லும்போது, அது தேவையான நேரத்தில் உங்கள் கஷ்டத்திற்கு முழுமையாக கைகொடுக்குமா என்று கேட்டல், அது சற்று சந்தேகமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக நிறுவனம் மூலம் எடுக்கப்படும் இன்சூரன்ஸ் மட்டும் வைத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று அங்கு எதாவது எதிர்பாராத விபத்து ஏற்படும் பட்சத்தில். அந்த இன்சூரன்ஸ் கவரேஜ் கொண்டு உங்கள் உடல்நிலை ஓரளவு சரியாகும் வரை மட்டுமே உங்களுக்கு அந்த இன்சூரன்ஸ் பயன்படும்.

தேவையான முதலுதவி மட்டும் அளித்து, நீங்கள் ஓரளவு உடல்நலம் அடைந்த நிலையில் மீண்டும் தாயகம் அனுப்பப்படுவீர்கள். ஒருசில நிறுவனங்கள் மட்டுமே உங்களுக்கான முழு இன்சூரன்ஸ் பலன்களையும் உங்களுக்கு கிடைக்கும் வண்ணம் செய்து தருகின்றனர். இதனால் தான் உங்கள் நிறுவனம் இன்சூரன்ஸ் எடுக்கும் அதே நேரத்தில் நீங்கள் ஒரு தனிநபர் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று பலரும் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் இந்த இன்சூரன்ஸ் எடுப்பதால் உங்களுக்கு பெரிய அளவில் நன்மை தருமா என்றால் நிச்சயம் கிடைக்கும் என்பதே பதில். சிங்கப்பூரில் நீங்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கும்போது அதை உங்களுடைய மருத்துவ தேவைகளுக்கு நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளலாம். 50,000 வெள்ளிக்கு நீங்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் நீங்கள் 50 வெள்ளி வரை பணம் செலுத்தவேண்டியிருக்கும். சிங்கப்பூரை பொறுத்தவரை குறைந்தபட்சமாக 10 வெள்ளி மாதம் கட்டும் இன்சூரன்ஸ் பிளான்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் நீங்கள் வெளிநாடுகளில் எடுக்கும் இன்சூரன்ஸ்களை பிற நாடுகளிலும் கிளைம் செய்யலாம் என்பது யாரும் மறந்துவிட கூடாத ஒரு தகவல். ஆதலால் நீங்கள் எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும், உங்கள் நிறுவனம் உங்களுக்கு எடுக்கும் இன்சூரன்ஸ் போல நீங்களும் உங்களுக்கு ஒரு தனிநபர் இன்சூரன்ஸ் எடுப்பது மிகவும் நல்லது.

Related posts