சிங்கப்பூரில் இங்குள்ள ஒரு ஹோட்டலில் SHN எனப்படும் தனிமைப்படுத்துதல் காலத்தில் இருந்த இரு வெளிநாட்டினர் அரட்டை அடிக்கவும், சிற்றுண்டிகளை பகிர்ந்து உண்ணவும் ஆசைப்பட்டு விதிகளை மீறியஒன்றாக இருந்த நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போஜன்கி சுரேஷ் நாயுடு என்ற 37 வயது ஆடவரும் மற்றும் பாரதி துளசிராம் சவுத்ரி என்ற 48 வயது பெண்மணியும் தங்களின் SHN -களை மீறியதற்காக தலா மூன்று வார சிறை தண்டனை விதிக்கப்பட்டனர்.
முகமூடி அணியாததற்கான மற்றொரு குற்றச்சாட்டு சுரேஷின் தீர்ப்பின் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் கோவிட் -19 இன் கேரியர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும்போது மற்றவர்களுக்கு தொற்றுநோய்க்கான அபாயத்தை வெளிப்படுத்தியதாக குற்றம் சட்டப்பட்டுள்ளனர்.
மார்ச் 14 அன்று இந்தியாவில் இருந்து ஒரே விமானத்தில் இந்த இரண்டு இந்தியர்கள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.