TamilSaaga

ஆயுதமேந்திய வன்முறை.. “இந்திய வம்சாவளி சிங்கப்பூரர்” அதிரடி கைது.. பகீர் தகவலை வெளியிட்ட சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை!

சிங்கப்பூரில் 29 வயதான இந்திய வம்சாவளி சிங்கப்பூரர் ஒருவர், தீவிரவாதியாகி, ஆயுதமேந்திய வன்முறையில் ஈடுபடுவதற்காக வெளிநாட்டு மோதல் பகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டதால், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (ISA) கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

ராட்ஜேவ் லால் மதன் லால் என்ற அந்த 29 வயது நபர், சிங்கப்பூரில் உள்ள ஒரு தளவாட நிறுவனத்தில் பணிபுரிபவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. அவர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (ISD) நேற்று செவ்வாயன்று (மே 10) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு ஆன்லைன் மூலம் சந்தித்த இம்ரான் என்பவர் மூலம் தான் முதன்முதலில் மதனின் வாழ்க்கை போக்கு மாறியுள்ளது. BFA எழுச்சி போன்ற இஸ்லாமிய காலநிலை முன்னறிவிப்புகளில் இம்ரானின் பிரசங்கம், சதி கோட்பாடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட மதன் அவருக்கு ஒத்துழைத்தாக ISD கூறியது.

“காலப்போக்கில், இம்ரான் மற்றும் அன்வர் அல்-அவ்லாகி மற்றும் மூசா செரான்டோனியோ போன்ற பிற வெளிநாட்டு தீவிர போதகர்களின் ஆன்லைன் போதனைகளால் அவர் ஈர்க்கப்பட்டுள்ளார் என்றும் ISD ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரின் பிரபல Discothequeயில் நடந்த தகராறு.. இரண்டே நாளில் 5 பேரை “ஸ்கெட்ச் போட்டு தூக்கிய” சிங்கை போலீசார் – தொடரும் விசாரணை

கடந்த 2007ம் ஆண்டு, இம்ரானின் தீவிர பிரச்சாரம் காரணமாக அவர் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல அல்-அவ்லாகி என்பவர் யேமன் நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் ஆவார், அவர் அரேபிய தீபகற்பத்தில் அல்-கொய்தா பயங்கரவாதக் குழுவை வழிநடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் செப்டம்பர் 2011ல் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் “இஸ்லாத்தின் எதிரிகளைக் கொல்ல” BFA உடன் ஆயுதமேந்திய வன்முறையில் பங்கேற்பது தனது “மதக் கடமை” என்று ராட்ஜேவ் உறுதியாக நம்பியுள்ளார், என்று ISD மேலும் கூறியது. அதுமட்டுமல்லாமல் ராட்ஜேவ் தனது கொள்கைகளை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீதும் திணிக்க முயன்றுள்ளார்.

மேலும் ஆயுதமேந்திய வன்முறையை மேற்கொள்ளும் திட்டங்களில் தன்னுடன் சேர அவர்களை நியமிக்க முயன்றுள்ளார்.

மேலும் ஆயுதமேந்திய வன்முறையை மேற்கொள்ளும் திட்டங்களில் தன்னுடன் சேர அவர்களை நியமிக்க முயன்றுள்ளார். “ராட்ஜேவ் சிங்கப்பூருக்கு எதிராக எந்த குறிப்பிட்ட தாக்குதல் திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை என்றும், ஆனால் சிங்கப்பூரின் நலன்களுக்கு எதிராக செயல்படும் வெளிநாடுகளில் தாக்குதல் நடத்த இம்ரான் அல்லது BFA அறிவுறுத்தினால் தான் தயாராக இருப்பதாக ஒப்புக்கொண்டார்”

வெறும் 5 நிமிட கோளாறு.. அதுக்கே மன்னிப்பு கேட்ட SMRT.. “Perfection”-ல் மற்ற நாடுகளுக்கு Don-ஆக இருக்கும் சிங்கப்பூரில் இதுவரை இல்லாத சம்பவம்

சிங்கப்பூரில் ஆயுதம் தாங்கிய வன்முறையை ஆதரிப்பவர்கள், ஊக்குவிப்பவர்கள், மேற்கொள்வது அல்லது தயார்படுத்துவது போன்ற வன்முறைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக “உறுதியான நடவடிக்கை” எடுக்கப்படும் என்று ISD கூறியது.

தற்போது மதன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு அடுத்தகட்ட விசாரணைகள் நடந்து வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts