TamilSaaga

சிங்கப்பூரில் பணி நீக்கம் அதிகரிப்பு.. வேலை நாட்கள் குறைப்பு – அதிர்ச்சியூட்டும் அறிக்கை

சிங்கப்பூரில் கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக முதலாம் காலாண்டை விட இரண்டாம் காலாண்டில் பணியாட்கள் குறைப்பு நடவடிக்கை அதிகரித்துள்ளது. பல்வேறு ஊழியர்களின் பணி நாட்களும் குறைக்கப்பட்டுள்ளது.

முதலாம் காலாண்டில் ஏறத்தாழ 2270 பணியாட்கள் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டாம் காலாண்டில் சுமார் 2340 பேர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே இது முதலாம் காலாண்டை விட சற்றே அதிகம் என மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தற்போது பணியாட்கள் குறைப்பு விகிதன் அதிகரித்துள்ளது என்றாலும் கோவிட் நெருக்கடி நிலைக்கு முன்பு இருந்த நிலையை ஒப்பிடும் போது ஆட்குறைப்பு எண்ணிக்கை இன்னும் கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts