TamilSaaga

‘தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் தளர்வுகள் தானாக வரும்’ – அமைச்சர் லாரன்ஸ் உறுதி

சிங்கப்பூரில் தற்போது கொரோனா நோய்த் தொற்றானது உருமாறும் காலகட்டத்தில் இருப்பதாக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்கூறியுள்ளார். மேலும் சிங்கப்பூர் தனது இயல்பு நிலையை நோக்கி செல்வதற்கு மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வது மட்டுமே சிறந்த வழியாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் வர்த்தக சம்மேளம் நடத்திய இணையவழி கலந்துரையாடலில் அமைச்சர் இந்த கருத்தினை முன்வைத்தார். தற்போது சிங்கப்பூரில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வோரின் விகிதம் அதிகரித்து வருவதால் சிங்கப்பூர் அரசு மீண்டும் தனது எல்லைகளை திறப்பது குறித்து ஒரு முக்கிய கலந்துரையாடலில் அரசு ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும் வைரஸ் உருமாறும் இந்த காலகட்டத்தில் கட்டுப்பாடுகள் என்பது நிச்சயம் தேவையான ஒன்று என்று அமைச்சர் கூறினார். இன்னும் அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு கூடுதலாக பல தளர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.

ஆகாவே மக்கள் பலரும் தாமதிக்காமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது சிங்கப்பூரில் 13 முதல் 39 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.

Related posts