TamilSaaga

“சிங்கப்பூரில் 160 வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது” – என்ன காரணம்?

சிங்கப்பூரில் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 160 வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வேலை செய்ததன் காரணமாக இவர்களுடைய வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் லூயிஸ் என்பவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக மனிதவளத் துறையின் மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் இந்த பதிலை தெரிவித்தார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சட்டத்தின் அடிப்படையில் வேலை அனுமதி பெற்றவர்கள் அந்த அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ முதலாளிகளுக்கு மட்டுமே வேலை செய்ய முடியும்.

அப்படி குறிப்பிடப்படாத முதலாளிகளுக்கும் மற்ற வர்த்தக நிறுவனத்திற்கு வேலை செய்வது குற்றமாகவும் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் பல வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 2018 ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, இன்போகாம் டெக்னாலஜி துறையில் பணிபுரியும் 11 வேலைவாய்ப்பு பாஸ் மற்றும் எஸ் பாஸ் வைத்திருப்பவர்கள் மனிதவள அமைச்சகத்திற்கு (எம்ஓஎம்) தவறான தகுதி சான்றிதழைகளை சமர்ப்பித்ததாக கண்டறியப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts