TamilSaaga

“நம் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன்” : சிங்கப்பூரில் திருமணமான பெண்ணை மிரட்டியவருக்கு சிறை

சிங்கப்பூரில் திருமணமான ஒரு பெண்ணின் சில படங்களை “பகிர்ந்துவிடுவேன்” என்று கூறி மிரட்டல் உள்ளிட்ட குற்றங்களை செய்த ஒருவருக்கு (அவரோடு தொடர்பில் இருந்ததாக கருதப்படுபவர்) இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 3) மூன்று மாதங்கள் மற்றும் மூன்று வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

29 வயதான சிங்கப்பூரை சேர்ந்த அந்த குற்றவாளி, தன்னுடனான பழக்கத்தை முறித்துக்கொள்ள விரும்பிய அந்த 32 வயதான பெண்ணின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் அப்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்புவதாக கூறியுள்ளார்.

அந்த நபர் இதற்கு முன்பு இரண்டு குற்றவியல் மிரட்டல்கள் மற்றும் ஒரு கிரிமினல் அத்துமீறல் குற்றச்சாட்டில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பகட்டத்தில் இந்த ஜோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் தங்கள் காதல் உறவை வளர்க்க தொடங்கியுள்ளது. அந்த சமயத்தில், அவர்கள் இருவரும் ஒருமித்த பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அந்த ஆடவர் வீடியோ (7 முறை) எடுத்துள்ளார். மேலும் வீடியோ அழைப்பின் போது அந்தப் பெண் தனது உடலை அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதனை அந்த ஆடவர் ஸ்கிரீன் ஷாட்களாக சேமித்து வைத்துள்ளார்.

இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பரில், அந்தப் பெண் அவரிடம் நமது இந்த உறவை நிறுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் அந்த பெண்ணின் கணவர், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் அவரது திருமணத்திற்குப் புறம்பான உறவு பற்றி தெரிவிப்பதாக மிரட்டியுள்ளார்.

Related posts