TamilSaaga

சிங்கப்பூரில் வாய்ப்புகளை குவிக்கும் Electrical Skilled Test… நீங்க கட்டுற ஒவ்வொரு பணமும் வீணாகாது – இதை படிங்க சீக்கிரம் Flightஐ பிடிக்கலாம்!

சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல ரொம்பவே பிரபலமாக இருக்கும் skilled testல் இருக்கும் ஒரு துறை தான் electrical. இதில் டெஸ்ட் அடிப்பது எப்படி என்னென்ன இருக்கும் என்பது குறித்து தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் skilled test இன்ஸ்ட்யூட்களில் துறைகளை trade என்றே குறிப்பிடுவார்கள். அப்படி electrical trade டெஸ்ட் அடிப்பது குறித்த அடிப்படை தகவல்கள் தெரிந்தால் பலருக்கும் இதை தேர்வு செய்வது எளிதாக இருக்கும்.

படித்தவர்கள் கூட இதில் பயிற்சி பெறலாம். Electrical டெஸ்ட்டிற்கு மட்டும் 2.50 லட்ச ரூபாய் முதல் 2.70 லட்ச ரூபாய் கேட்பார்கள். இது வெறும் டெஸ்ட் அடிக்க மட்டும் தான். அடுத்து கம்பெனி பார்த்து டிக்கெட் போட்டு சிங்கப்பூர் வேலைக்கு வர தனியாக ஒரு 2 லட்ச ரூபாய் தேவைப்படும். இன்ஸ்ட்யூட்டினை பொறுத்த வரை மொத்தமாக காசு கேட்க மாட்டார்கள். installmentல் கட்டிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசையா… டிகிரி படிச்சிருந்தாலே போதும் S-Pass இருக்கு… S Pass வாங்க இதை Follow பண்ணுங்க..

இன்ஸ்ட்யூட்டில் அட்மிஷன் போட்டவுடன் தங்க வைத்து பயிற்சி கொடுப்பார்கள். இதற்கு 2 மாதம் வரை நேரம் எடுக்கும். ஒரு நாளைக்கு 1 மணி நேரம் மட்டுமே க்ளாஸ் எடுப்பார்கள். மற்ற நேரங்களில் Practical பயிற்சி இருக்கும். ஏனெனில் 4 மணி நேர மெயின் டெஸ்ட்டில் 3 மணி நேரம் Practical மட்டுமே நடக்கும்.

இதற்கிடையில் பயிற்சி தரும் இன்ஸ்ட்யூட்டிலேயே மாடல் டெஸ்ட் வைத்து கொண்டே இருப்பார்கள். மெயின் டெஸ்ட்டினை போலவே நடக்கும் இது 3.30 மணி நேரம் மட்டுமே. இதில் தேர்வானவர்களே மெயின் டெஸ்ட் செல்ல தகுதி பெறுவார்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு வேலை கேட்டு அலுத்து போயிட்டீங்களா? Chill பண்ணுங்க.. நீங்களே வேலைக்கு Apply பண்ணலாம்… பிடிச்ச வேலையும் தட்டி தூக்குலாம்

மெயின் டெஸ்ட்டில் பாஸானதும், ஏஜென்ட் அல்லது இன்ஸ்ட்யூட்டே கம்பெனி போட்டு தருவார்கள். பெரும்பாலும் இந்த பாஸில் வருபவர்களுக்கு முதலில் 1 அல்லது 2 வருடம் தான் போட்டு தருவார்கள். கம்பெனியில் ப்ராஜெக்ட் இருப்பதை வைத்து மீண்டும் இந்த காலம் நீட்டிக்கப்படும்.

சிங்கப்பூரில் டெஸ்ட் அடித்து வொர்க் பெர்மிட்டில் வந்து விட்டு இங்கு அந்தந்த துறைகளுக்கு இருக்கும் டிப்ளமோ கோர்ஸில் படித்து விட்டு S-Passக்கு கூட மாற முடியும். கோர்ஸ்கள் 6 மாதம் முதல் 1 வருடம் வரை இருக்கும். இதற்கு $3000 சிங்கப்பூர் டாலர் வரை $4000 சிங்கப்பூர் டாலர் வரை செலவுகள் இருக்கும். கல்லூரி நேரமும் உங்க வேலைக்கு ஏற்றவாறு இருக்கும். மாலை நேரத்தில் வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே இருக்கும். மேலும் இந்தியாவில் இருந்து படித்து வந்தவர்கள் ஒரு வருடம் வேலை பார்த்து விட்டு கல்வி தகுதி வைத்து கூட ப்ரோமோஷனும் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரிக்கல் வேலைக்கு வொர்க் பெர்மிட்டில் $18 சிங்கப்பூர் டாலர் முதல் $20 சிங்கப்பூர் டாலர் வரை கொடுப்பார்கள். உங்களது அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க சம்பளமும் உயரும். உட்சபட்சமாக நாள் ஒன்றுக்கு $40 சிங்கப்பூர் டாலர் வரை சம்பளமாக கிடைக்கும். மற்ற துறைகளை விட டெஸ்ட் அடிக்க எலெக்ட்ரிக்கலுக்கு தான் அதிகமாக செலவுகள் ஆகும். ஆனால் இதில் அதிக வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொடர்ந்து வேலைகள் இருக்கும். மேலும் ஒரு நாளைக்கு 2ல் இருந்து 3 மணி நேரம் ot-யும் இருக்கும் என்பதால் நல்ல சம்பளமே கிடைக்கும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts