TamilSaaga

விரைவாக சிங்கப்பூர் வர எந்த “Work Pass Best?”.. இந்தியர்கள் அதிகம் எந்த வொர்க் பாஸில் வருகிறார்கள்??? இதை தெரிந்து கொண்டு உங்கள் ஏஜென்டுகளிடம் பேசுங்கள்

சிங்கப்பூரில் வேலை செய்ய விருப்பம் உடையவர்கள், சிங்கப்பூர் அரசாங்கம் அளிக்கும் பல்வேறு வகையான ஒர்க் பெர்மிட் பாஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில், சிங்கப்பூரில் பல்வேறு துறைகளில் பணிபுரிவதற்கு தேவைப்படும் தொழிலாளர்களுக்காக சிங்கப்பூர் அரசாங்கம் சமீபத்தில் Non Traditional Source (NTS) occupation List pass ஐ அறிவித்துள்ளது.

இதன்படி, சிங்கப்பூரில் உள்ள உற்பத்தி மற்றும் சேவைத்துறை நிறுவனங்கள், குறிப்பிட்ட சில தொழில்களுக்கு NTS பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து பணி அனுமதி வைத்திருப்பவர்களை நியமித்துக் கொள்ளலாம். இம்முறையானது செப்டம்பர் 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

NTS பட்டியலில் உள்ள நாடுகள் :

Malaysia

People’s Republic of China (PRC)

North Asian sources (NAS):

Hong Kong (HKSAR passport)

Macau

South Korea

Taiwan

Bangladesh

India

Myanmar

Philippines

Sri Lanka

Thailand

NTS இல் பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் NTS Quota பணியாளர்கள் 8% சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். உதாரணமாக நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் 45 எனில், NTS Quota பணியாளர்கள் 3 பேர் வரை இருக்கலாம்.

NTS பணி அனுமதி வைத்திருப்பவர்கள் அதிக திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும் (அதாவது R1 criteria அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்)

NTS Quota மூலமாக நியமிக்கப்படும் பணியாளருக்கு குறைந்தது $2,000 நிலையான மாத சம்பளம் தரப்பட வேண்டும்.

நிலையான மாத சம்பளம்

நிலையான மாத சம்பளம் என்பது அடிப்படை சம்பளத்துடன் நிலையான மாதாந்திர படிகள் (allowance) உள்ளடக்கியது.

இது பணியாளர் அல்லது நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் பணியாளரின் மருத்துவ அல்லது தனிப்பட்ட விடுப்பை பொருட்படுத்தாமல், மாதத்திற்கு மாதம் மாறுபடாத கட்டணமாகும்.

ஆனால் இதில் பணியாளர்களின் ஓவர்டைம் பேமெண்ட், போனஸ் வருடாந்த ஊதிய கமிஷன்,மற்றும் பணிக்காக பணியாளர் செலவு செய்த தொகை, பணியாளரின் சார்பாக செய்யப்பட்ட பங்களிப்புகள் உட்பட, எந்தவொரு ஓய்வூதியம் அல்லது வருங்கால வைப்பு நிதிக்கு முதலாளி செலுத்த வேண்டிய பங்களிப்புகள் போன்றவைகள் அடங்காது.

நிலையான மாதாந்திர படிகள்

இது மாதத்திற்கு மாதம் மாறுபடாது. இதில் நிலையான உணவு மற்றும் வீட்டு படிகள் (allowance) அடங்கும்.

NTS பணி அனுமதி பெறும் பணியாளர்கள் தங்களது பணி அனுமதியில் குறிப்பிடப்பட்ட துறைகளில் மட்டுமே பணி புரிய வேண்டும்.

NTS pass இல் பணியாளர்கள் எந்தெந்த துறைகளில் பணிபுரியலாம்?

இந்திய உணவகங்களில் சமையல் செய்பவர்களாக,

உணவு பதப்படுத்தும் நிறுவனங்களில் காய்கறி பிக்கர், சுவையூட்டிகள் & சாஸ் தயாரிப்பாளர்களாக பணிபுரியலாம்.

இந்திய உணவகங்களில் சமையல் பணிபுரிய NTS இல் பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்கள், கண்டிப்பாக SFA license (Singapore Food Agency) வைத்திருக்க வேண்டும்.மேலும், இந்திய உணவு வகைகளான பிரியாணி, பரோட்டா, மற்றும் சிற்றுண்டிகளான வடை, பணியாரம் போன்றவற்றை முதன்மை உணவுகளாக கொண்டு செயல்பட வேண்டும். இந்திய உணவகங்களில் பணிபுரிய India, Bangladesh மற்றும் Sri Lanka போன்ற நாடுகளில் இருந்து பணியாளர்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு நியமிக்கலாம்.

உரிமம் பெற்ற ஹோட்டல்களில், வீட்டு பராமரிப்பு தொழிலாளர்களாக
( House keeping) மற்றும் போர்ட்டர்களாகவும் பணிபுரியலாம்.

உற்பத்தி நிறுவனங்களில், போக்குவரத்து, பொறியியல், மற்றும் வாகன நிறுவனங்களில்

Sheet metal workers

Welders and flame cutters

Metal moulders and coremakers

Riggers and cable splicers

Structural metal preparers and erectors ஆக பணிபுரியலாம்.

வயது தகுதி

அனைவருக்கும் குறைந்தபட்ச வயது 18.

மலேசியத் தொழிலாளர்கள் 58 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்.

மலேசியர்கள் அல்லாத தொழிலாளர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த pass பெறுவதற்கான ஒப்புதல் காலம் இரண்டிலிருந்து மூன்று நாட்களே ஆவதால், விரைவாக சிங்கப்பூருக்கு பணிபுரிய வர நினைப்பவர்களுக்கு NTS pass நிச்சயம் உதவியாக இருக்கும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள தமிழ் சாகா ஃபேஸ்புக் பக்கத்தை நீங்க ஃபாலோ பண்ணலாம்.

Related posts