சிங்கப்பூரில் லாட்டரி சீட்டு விற்பனை சட்டபூர்வமானது. இதில் அதிகம் பேரால் வாங்கப்படும் TOTO லாட்டரியை எப்படி வாங்க வேண்டும் என நினைக்கும் உங்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கலாம்.
முதலில் சிங்கப்பூர் Pool கணக்கினை உருவாக்க வேண்டும். இதற்கு நீங்கள் சிங்கப்பூர் சிட்டினாகவோ, வெளிநாட்டு ஊழியராகவோ இருக்கலாம். ஆனால் உங்களுக்கு 21வயதாவது ஆக வேண்டியது கட்டாயம். சிங்கப்பூர் மொபைல் எண் மற்றும் லோக்கல் முகவரியை கொடுத்து கணக்கினை துவங்க வேண்டும். ஒருவருக்கு ஒரு கணக்கு மட்டுமே. ஆன்லைனில் இதை செய்யும் போது வீடியோகாலில் உங்களின் கணக்கு சரிபார்க்கப்படும். சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ பூல் கிளைகளில் நீங்கள் நேரடியாக சென்று சான்றிதழிகளை கொடுத்து கணக்கை துவக்கி கொள்ளலாம்.
ஆன்லைனில் இந்த கணக்கை பயன்படுத்தும் போது $100 சிங்கப்பூர் டாலர்களை மினிமம் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு டெபாசிட்டிற்கும் ஒருமுறைக்கு $0.80 டாலர் கட்டணமாக பெறப்படும். ஆனால் சிங்கப்பூர் பூல் கிளைகளில் இதற்கு கட்டணம் இல்லை.
TOTO லாட்டரி வாங்க, https://online.singaporepools.com/en/lottery என்ற முகப்பு பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன் இடது பக்கத்தில் TOTO என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் Ordinary, System 7 to 12 and System Roll என்பதில் எதையாவது தேர்வு செய்யலாம். பின்னர் பந்தய தேதியை தேர்வு செய்யவும். இதில் ஒருமுறை அல்லது தொடர்ச்சியாக இரண்டு அல்லது நான்கு டிராக்கள் பந்தயம் வைக்க தேர்வு செய்யலாம்.
நீங்கள் பந்தயம் கட்ட விரும்பும் எண்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.
Ordinaryக்கு, ஆறு டிஜிட்டை தேர்வு செய்ய வேண்டும். System 7 to 12க்கு 7 முதல் 12 டிஜிட்களை தேர்வு செய்ய வேண்டும். System Roll பந்தயத்திற்கு, 5 டிஜிட்டை தேர்வு செய்ய வேணும். கடைசியாக ‘R’ இருக்க வேண்டும். இதே முறையை பயன்படுத்தி ஒரே பந்தய வகையில் பலகைகளைச் சேர்க்கவும். ஒவ்வொரு முறையும் அதிகபட்சம் 10 பலகைகளைச் சேர்க்கலாம். இதில் மாற்றம் கூட செய்ய இயலும். ஒரு போர்டின் விலை $1 ஆகும்.
உங்கள் பந்தய சீட்டில் எண்களை வரிசைப்படுத்திய பின்னர் ADD TO BET SLIP என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த எண்கள் பந்தய சீட்டில் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்த்தப்பின்னர் PLACE BETஐ தேர்ந்தெடுக்கவும். பின்னர் ACCEPT என்பதை அழுத்தி உங்கள் லாட்டரியை உறுதி செய்து கொள்ளலாம். ஆன்லைனில் TOTO லாட்டரி வாங்க இதே முறை தான் எல்லா இடங்களிலும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரம் இருமுறை திங்கள் மற்றும் வியாழக்கிழமை லாட்டரி குலுக்கல் நடைபெறும். TOTO லாட்டரியை சிங்கப்பூர் மக்கள் மட்டுமல்ல இங்கு வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களும் வாங்கலாம். அதற்கு கட்டுப்பாடு கிடையாது. நீங்கள் வாங்கிய TOTO லாட்டரி டிக்கெட்டுக்கு லம்பாக பரிசு விழுந்தால் அந்த தொகையை வாங்க உங்களுடைய வயதுக்கான சான்று மற்றும் சிங்கப்பூர் விசா காட்டினாலே போதும். வேறு எந்த ஆவணங்களையும் காட்ட தேவையில்லை. இதில் பெரிய தொகையை வெல்லும் பட்சத்தில் உங்களுக்கு சிங்கப்பூர் குடியுரிமை கிடைக்கவும் வாய்ப்பு அமையும்.
TOTO லாட்டரி டிக்கெட்டில் விழும் தொகைக்கு நீங்கள் சிங்கப்பூரில் வரியே கட்ட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.