TamilSaaga

சிங்கப்பூரில் இன்று இரவு நடக்கும் Toto Lottery Draw.. முதல் பரிசான Jackpot S$1 million வெல்வதற்கான Success Formula-வை தமிழில் சொல்லி… வியக்க வைக்கும் Lottery Expert

தமிழகத்தில் லாட்டரி என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நமது சிங்கப்பூர் மற்றும் அமீரகம் போன்ற நாடுகளில் இன்றளவும் அரசே இந்த லாட்டரி விற்பனையை நடத்தி வருகின்றது. அந்த வகையில் இந்த பதிவில் சிங்கப்பூர் TOTO Drawவில் எவ்வாறு பங்கேற்பது, வெற்றிக்கென்று தனி யுக்தி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து காணலாம்.

TOTO Draw எவ்வாறு செயல்படுகிறது?

முதலில் சிங்கப்பூர் முழுவதும் உள்ள ஏதேனும் ஒரு Singapore Pools நிலையத்தில் இருந்து 1 சிங்கப்பூர் வெள்ளி கொடுத்து நீங்கள் இந்த TOTO லாட்டரி சீட்டுகளை வாங்க வேண்டும். 1 முதல் 49 வரை ஏதேனும் 6 எண்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

எண்களை தேர்வு செய்த பிறகு அதை Singapore Pools நிலையங்களில் கொடுத்து உங்கள் 6 இலக்க எண்ணை பதிவு செய்து ரசீது பெற்றுக்கொள்ளவேண்டும். சிங்கப்பூரில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த TOTO Draw நடைபெறுவது வழக்கம். இவ்வரும் தான் TOTO Draw நடைபெறுகின்றது.

TOTO பரிசுகள் எப்படி அளிக்கப்படுகிறது?

TOTO drawவில் மொத்தம் 7 தரநிலைகளில் பரிசுகள் அளிக்கப்படுகிறது, லாட்டரி குலுக்கல் நடைபெறும்போது நீங்கள் வாங்கிய 6 எண்களும் பொருந்தினால் உங்களுக்கு தான் அந்த ஜாக்பாட் பரிசான 1 மில்லியன் வெள்ளி.

அடுத்தபடியாக 6ல் 5 எண்கள் பொருந்தி அரசு தரும் ஒரு எக்ஸ்ட்ரா எண்ணும் பொருந்தும்பட்சத்தில் உங்களுக்கு Collection தொகையில் ஒரு பங்கு தரப்படும். 5 எண்கள் மட்டும் பொருந்தும் நபர்கள், அதேபோல 4 + Extra நம்பர் பொருந்தும் நபர்களுக்கும் அதே போல Collection தொகையில் பங்கு தரப்படும்.

Exclusive: இன்னும் 5 மாசத்துல கல்யாணம்.. அதுக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சே.. சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழக ஊழியர் – 2 வாரிசுகளை பறிகொடுத்து நிற்கும் தாய்!

இறுதியாக அரசு வெளியிடும் எண்களில் 3 எண்கள் உங்கள் டிக்கெட்டுடன் ஒத்துப்போனால் 10 வெள்ளியும், 3 + Extra நம்பர் ஒத்துப்போனால் 25 வெள்ளியும் 4 எண்கள் ஒத்துப்போனால் 50 வெள்ளியும் உங்களுக்கு கிடைக்கும். இந்த கடைசி மூன்று பரிசுகளும் Standard தொகையுள்ள பரிசுகள்.

பரிசு எப்போது கையில் கிடைக்கும்?

Draw வெளியான அடுத்த நாளே உங்களுக்கு cheque வடிவில் நீங்கள் வென்ற தொகை உங்களுக்கு கிடைக்கும். அந்த காசோலையை நீங்கள் வங்கியில் கொடுத்து உங்கள் பரிசை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த TOTO பரிசுக்கு வரி உண்டா?

நீங்கள் TOTOவில் முதல் பரிசான 1 மில்லியன் வெள்ளி ஜெயித்தாலும் சரி அல்லது இறுதி பரிசான 10 வெல்லு ஜெயித்தாலும் சரி இந்த பணத்திற்கு எந்தவித கமிஷன் மற்றும் வரி என்பது எதுவுமே இல்லை. நீங்கள் வென்ற பணம் அப்படியே உங்களை சேரும்.

சரி TOTOவை வெல்ல ரகசிய பார்முலா இருக்கா?

TOTOவில் 6 எண்களை தேர்ந்தெடுக்க மொத்தம் 1 கோடிக்கும் மேற்பட்ட காம்பினேஷன் உள்ளது. ஆகையால் இதில் கணக்குப்போட்டு வெல்வது என்பது சற்றும் முடியாத காரியம். ஆகவே இந்த லாட்டரி என்பது முழுக்க முழுக்க உங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி மட்டுமே உள்ளது.

சிங்கப்பூரில் இன்று இரவு நடக்கும் Toto Draw.. S$10,00,000 வெல்ல வாய்ப்பு – அடுத்த 4D Draw நடக்கும் தேதியும் அறிவிப்பு!

ஆகையால் இதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ளாமல் பொதுபோக்குக்காக அவ்வப்போது மட்டுமே பங்கேற்பது மிகவும் நல்லது. காரணம் இதில் ஒரு முறை விளையாடி வென்றவரும் உண்டு. பலமுறை விளையாடி தோற்றவர்களும் உண்டு.

TOTO Draw குறித்து மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்து “Easwaran Speaks” என்ற youtube சேனல் வாயிலாக இதில் பலவருட அனுபவம் உள்ள அய்யா ஈஸ்வரன் அவர்கள் தெரிவித்த கருத்துக்களே..

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts