TamilSaaga

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு ஒப்பிடும் பொழுது 25% அதிகரித்த வீட்டு வாடகை… இனிவரும் காலாண்டிலும் அதிகரிக்கும் என ஆய்வறிக்கை தகவல்!

சிங்கப்பூரில், வீடுகளின் வாடகையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், கடந்த ஜூலை மாதத்திலும் ஏற்றம் கண்டுள்ளதாக என தரவுகள் வெளியாகி உள்ளன. வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு ஒர்க் பெர்மீட்டில் வேலைக்கு செல்பவர்கள் தவிர S -PASS, E-PASS மற்றும் PR தரநிலைகளில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் வாடகை வீட்டிலேயே வசிக்கின்றனர். ஒரு வீட்டிற்குரிய முழு வாடகையும் கொடுக்க முடியாது என்பதால், வீடுகளில் உள்ள அறைகளை தனித்தனியாக வாடகைக்கு எடுத்து பெரும்பாலானோர் தங்கியுள்ளனர்.

அப்படி தங்கி இருக்கும் வீடுகளில் கிட்சன் பொதுவானதாக இருக்கும், அட்டாச் பாத்ரூம் வரை தவிர மற்ற அறைகளில் தங்கி இருப்பவர்களுக்கு பாத்ரூம்களும் பொதுவாகவே இருக்கும். சிங்கப்பூரில் இருக்கும் அதிகமான வீட்டு வாடகை சமன் செய்வதற்காக, இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு தான், சம்பாதித்து நம் வீடுகளுக்கு பணம் அனுப்புகின்றனர்.

இந்நிலையில் ஜூன் மாதத்தில் வீட்டு வாடகையானது 1.4% அதிகரிந்த நிலையில், ஜூலை மாதத்திலும் 2% அதிகரித்துள்ளது என தரவுகள் கூறுகின்றன. 2022 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட வீட்டு வாடகை ஆனது 25% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வருகின்ற காலாண்டிலும் வீட்டு வாடகை அதிகரிக்கவே செய்யும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, வாடகை வீட்டில் வசிக்கும் நண்பர்கள் வீட்டு வாடகை ஏற்றத்தினை கருத்தில் கொண்டு, செலவினங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related posts