சிங்கப்பூரில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடையே பெருந்தொற்று வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் நாளை திங்கள்கிழமை (செப்டம்பர் 13) முதல் குடியிருப்பு பராமரிப்பு இல்லங்களுக்கான அனைத்து தனிப்பட்ட வருகைகளும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில், 18 வயதானவர்கள் வசிக்கும் பராமரிப்பு மையங்களில் 42 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் வாரங்களில் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த அமைப்புகளில் பாதிக்கப்படக்கூடிய முதியவர்களைப் பாதுகாக்க நாங்கள் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சகம் கூறியது.
இதனையடுத்து வருகைகள், அடுத்த மாதம் அக்டோபர் 11 வரை நான்கு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படும். இந்த தற்காலிக வருகை இடைநிறுத்தம், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத முதியவர்களை ஊக்குவிக்க எங்களுக்கு நேரம் அளிக்கும் என்றும். மேலும் வயதான பராமரிப்பு வசதிகளில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .
வயது முதிர்ந்த பராமரிப்பு வசதிகளில் வசிப்பவர்கள், செப்டம்பர் 14 முதல் COVID-19 தடுப்பூசி பூஸ்டர் ஷாட்களைப் பெற அழைக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்பு தடுப்பூசி முறையின் இரண்டு டோஸ்களையும் முடித்த குடியிருப்பாளர்களும் இதற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.