TamilSaaga

ALS நோயால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் பெண்.. 8 வருடங்கள் 24/7 போராடிய பெற்றோர்.. ‘நான் போகிறேன்’ என்று கண்ணீர் வழியே தகவல் சொல்லி உயிரை விட்ட மகள்

என்னவென்று சொல்வது! ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளை பிறந்தால், அந்த வீடே அதிர்ஷ்டம் செய்துள்ளது என்பார்கள். ஆனால், ஒரு பெண் பிள்ளை பிறந்து, இத்தனை கொடுமையை அனுபவித்து தன் உயிரை விட்டுள்ளது என்றால்… அதை என்னவென்று சொல்வது!?

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் Carolyn Chan Hui Yi. வயது 32. கடந்த 2014ம் ஆண்டு… அதாவது கரோலினுக்கு 24 வயது இருந்த போது, அவர் Amyotrophic Lateral Sclerosis (ALS) எனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதற்கு முன்பு வரை எல்லாம் நல்லபடியாக சென்றுக் கொண்டிருந்தது. தனது உயர் கல்வி மற்றும் பட்டப்படிப்பை முடித்த பிறகு, கரோலின் கனடாவில் வேலைப்பார்த்து வந்தார். நல்ல சம்பளம், நல்ல வாழ்க்கை என்று எல்லாம் நன்றாக சென்றது.

இந்த நிலையில், 2014ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கரோலின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் இதற்கு மேல் ஒரு வெளிநாட்டு ஊழியர் அசிங்கமும், வேதனையும் அனுபவித்திருக்க முடியாது.. 4 வயது மகன் முன்பு அரங்கேறிய கொடூரம்! – காட்டிக் கொடுத்த சிசிடிவி

மெல்ல மெல்ல குரல் மழுங்கியது. அவளது தசைகள் பலவீனமடைந்தன. ஒரு வருடத்திற்குள் 15 கிலோ எடையை அவர் இழந்த பிறகுதான், சானுக்கு ALS எனும் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

ALS என்பது மூளை மற்றும் தண்டு வடத்தில் உள்ள நியூரான்களைத் தாக்கும் ஒரு நோயாகும். இது உடலில் உள்ள தசைகளின் இயக்கத்தை முற்றிலும் நிறுத்திவிடும் ஒரு கொடூர குணம் கொண்ட நோயாகும்.

இந்நோய்க்கு தற்போது மருந்தே கிடையாது.

இதுகுறித்து கரோலின் தயார் ஜினெட் க்வெக் வேதனையுடன் அளித்த பேட்டியில், “எங்கள் மக்களுக்கு இப்படியொரு நோய் இருப்பதை அறிந்ததும், நாங்கள் உடைந்து போய்விட்டோம். கனடாவில் இருந்த எனது மகளுக்கு துணையாக இருக்க 3 மாதங்கள் கனடா சென்றிருந்தேன்.

அங்கு சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், மீண்டும் சிங்கப்பூர் திரும்பினோம். இங்கு உள்ளூர் மருத்துவர்களிடம் மகளை காண்பித்தோம். ஆனால், அவர்களும் கைவிரித்துவிட்டனர்” என்றார்.

இருப்பினும், தங்கள் மகள் வாழ்நாள் முழுவதையும் மருத்துவமனையில் கழிப்பதை க்வெக்கும் அவரது குடும்பத்தினரும் விரும்பவில்லை. இதனால், அவர்கள் தங்கள் வீட்டின் ஒரு படுக்கையறையை ICU பிரிவாக மாற்றி, தங்கள் மகளை அருகில் இருந்து அவர்களே கவனித்துக் கொண்டனர்.

“ICU யூனிட்டில்” வென்டிலேட்டர், ஆக்சிஜன் இயந்திரம், சளி உறிஞ்சும் பம்ப் இயந்திரம் மற்றும் பிற மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. நாளுக்கு நாள் மகளின் நிலை மோசமடைந்தது. ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒருமுறை அவளை சோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும். இரவில் தூங்கவும் முடியாது. ஏனெனில், எப்போதெல்லாம் கரோலின் இதயத்துடிப்பு சற்று கீழிறங்குமோ, அப்போதெல்லாம் பீப் சத்தம் அலறும்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் 1000 புதிய வேலை வாய்ப்புகள்.. திரும்பிப் பார்க்க வைக்கும் முக்கிய “அறிவிப்பு” – அதிரடி மாற்றங்களை வெளியிட்ட அமைச்சர் ஈஸ்வரன்

வெண்டிலெட்டரின் உதவியால் தான் கரோலின் சுவாசித்துக் கொண்டிருந்தார்.

இன்னும் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், கரோலின் தனது பெற்றோருடன் ஒரு எலக்ட்ரானிக் சாதனம் மூலம் தான் தொடர்புகொள்வார். அந்த சாதனம் மூலம் தான், தன் பெற்றோருக்கு இரவில் “குட்நைட்” மற்றும் “ஐ லவ் யூ” என்று கூறுவார்.

இருப்பினும், நாட்கள் செல்ல செல்ல அந்த சாதனங்களால் கூட அவரால் தொடர்பு கொள்ள இயலவில்லை. தனது எண்ணங்களை, தனது கண் இமைகளை நகர்த்துவதன் மூலம் தான் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது.

பிறகு, கண் இமைகளின் தசைகளும் அதன் கட்டுப்பாட்டை இழந்தன. இதனால், கரோலினால் கண் இமைகளை உயர்த்த முடியவில்லை. இதனால், கண்களை திறக்கவே முடியவில்லை. அந்த இக்கட்டான நேரத்தில், Eye Balls-களை நகர்த்துவதன் மூலம் தான் பெற்றோர்களுடன் அவரால் பேச முடிந்தது.

கரோலின் தன்னால் குரல் கொடுக்கவோ அல்லது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவோ முடியாமல் போனதால், அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைக் கவனித்த பிறகுதான், தங்கள் மகள் வாழ்வதையே விரும்பவில்லை என்று உணர்ந்தனர். ஒரு பெற்றோராக நித்தம் நித்தம் ரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

இத்தனை போராட்டங்களுக்கு பிறகு, மார்ச் 16, 2022 அன்று சான் தனது 33வது வயதில் தனது குடும்ப உறுப்பினர்கள் சூழ தன் உயிரை தன் வீட்டில் இருந்தபடியே விடுவித்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts