TamilSaaga

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மருத்துவ செலவுகள்… Health insurance singapore எடுப்பது ஏன் முக்கியம்… வொர்க் பாஸில் இருப்பவர்கள் என்ன செய்யலாம்?

Health insurance singapore:சிங்கப்பூர் உலகின் மிகவும் முன்னேறிய நகரங்களில் பாதுகாப்பான ஒன்று. தூய்மையான மற்றும் சிறந்த கல்வி முறையைக் கொண்டிருப்பதற்காக சிங்கப்பூர் புகழ்பெற்றது. அவர்களின் health insurance singapore தொடர்ந்து உலக தரவரிசையில் உள்ளது. அதுகுறித்து முக்கிய தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள்.

Health insurance singapore பதிவிடும் முறை:

சிங்கப்பூரின் மருத்துவ முறையில் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் PR health insurance singaporeஐ க்ளைம் செய்வது ரொம்பவே எளிதானது. சிங்கப்பூரில் சட்டப்பூர்வமாக வசிக்கும் அனைவருக்கும் கட்டாய ஆவணமான தேசிய பதிவு அடையாள அட்டை (NRIC) மூலம் பெரும்பாலான சேவைகளை அணுகலாம்.

இருப்பினும், குடியுரிமை பெறாதவர்கள் பிறப்புச் சான்றிதழை (15 வயதிற்குட்பட்டவர்கள் மட்டும்), பாஸ்போர்ட், வொர்க் பாஸ் (வெளிநாட்டவர்கள் பயன்படுத்தும் பொதுவான அடையாள வடிவம்) ஆகியவற்றையும் வழங்க முடியும்.

இதையும் படிங்க: Skill அடிக்க இன்ஸ்டியூட் போறீங்களா… Aluminum Formwork பயிற்சி முதல் டெஸ்ட் வரை எப்படி இருக்கும்? சம்பளம் எவ்வளவு இருக்கும்?

நீங்கள் எந்த சிகிச்சையையும் பெறுவதற்கு முன் (மருந்துகள் உட்பட), முன்பு குறிப்பிடப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு கிளினிக்கில் பதிவு செய்ய வேண்டும்.

சில நேரங்களில் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் வாக்-இன் சந்திப்புகளைப் பெறுவது சாத்தியம். ஆனால் வீட்டை விட்டு வெளியேறும் முன் அப்பாயின்மெண்ட் வாங்கி கொண்டு செல்வது தான் சிறந்தது.

health insurance singaporeல் சிகிச்சை:

சிங்கப்பூர் Civil Defence Force ஆம்புலன்ஸுக்கு 995ஐ அழைக்கவும். ஆனால் மருத்துவ அவசரநிலைக்கு மட்டும் இதை பயன்படுத்த வேண்டும். மீறினால் $2741 வெள்ளி அபராதமாக கேட்கப்படும். அவசரமற்ற ஆம்புலன்ஸ்களுக்கு 1777ஐ அழைக்கவும். ஆனால் கார் அல்லது டாக்ஸி மூலம் மருத்துவமனைக்குச் செல்வது பெரும்பாலும் வேகமானதாக கருதப்படுகிறது.

நீங்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது, உங்கள் தேசியப் பதிவு அடையாள அட்டை (NRIC), பிறப்புச் சான்றிதழ் (15 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடைய நோயாளிகள்), பாஸ்போர்ட், dependet pass அல்லது வொர்க் பாஸ் அல்லது நீங்கள் சிகிச்சை பெறுவதற்கு முன் health insurance singapore ஆகியவை கேட்கப்படும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியரா நீங்க… Class 4 லைசன்ஸ் எப்படி எடுக்கலாம்? குழப்பமே வேணாம் இத படிங்க!

உங்களிடம் காப்பீட்டு அட்டை இருந்தால் அதை மருத்துவமனை உங்கள் Health insurance கம்பெனியிடம் இருந்து நேரடியாக கட்டணம் வசூலித்து கொள்ளும்.
உங்களிடம் health insurance singapore, அவர்களின் மருத்துவ நெட்வொர்க்கில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளைப் பற்றி முன்பே தெரிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் சொந்த பாக்கெட்டில் இருந்து உங்கள் சிகிச்சைக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும். சில மருத்துவமனைகள் திரும்பப்பெறக்கூடிய தொகையையும் கேட்கலாம்.

வொர்க் பாஸில் இருப்பவர்களுக்கான Health insurance singapore:

நீங்கள் வொர்க் பாஸ் அல்லது Spassல் வேலை செய்பவராக இருந்தால், உங்கள் முதலாளி உங்களுக்கு வருடத்திற்கு குறைந்தபட்சம் $15,000 சிங்கப்பூர் டாலர் health insurance singapore எடுத்திருக்க வேண்டும். வேலை அல்லாத உடல்நிலை பிரச்னைகளை தவிர்த்து மற்ற சிகிச்சைக்களுக்கு முதலாளியால் செலுத்தப்பட வேண்டும். சிங்கப்பூர் அரசு இந்த கவரேஜை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. உங்கள் முதலாளி இதை செய்யவில்லை என்றால், அபராதம் மற்றும் சில நேரங்களில் சிறைத் தண்டனையை கூட எதிர்கொள்ள நேரிடும்.

துரதிர்ஷ்டவசமாக, வொர்க் பெர்மிட் பாஸில் பணிபுரிபவர்கள் தங்கள் முதலாளி மூலம் கட்டாய காப்பீட்டின் கீழ் இல்லை. இந்தத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த காப்பீட்டுக் கொள்கையை வாங்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், அவர்கள் அவ்வாறு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால், வெளிநாட்டு ஊழியர்கள் தனியார் காப்பீட்டை வாங்குவது தான் சிறந்தது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதை சிங்கப்பூர் வருவதற்கு முன்னரே தனியார் காப்பீட்டாளர்களிடமிருந்து வாங்கலாம். சிங்கப்பூரில் வாழ்க்கைத் தரம் மிக அதிகமாக இருந்தாலும், செலவும் அதிகமாக உள்ளது. உடல்நலக் குறைவு தொடர்பான எதிர்பாராத மருத்துவச் செலவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதுக்கு health insurance singapore தான் முக்கியம்.

சிங்கப்பூரில் பொது மருத்துவமனைகள் பொதுவாக மிகச் சிறந்தவை என்றாலும், சமீபத்திய ஆண்டுகளில் மருத்துவமனையில் கூட்டம் அதிகரித்துள்ளதால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை வரலாம். உலகளாவிய மருத்துவத் திட்டம் பல வசதிகளில் உங்கள் சிகிச்சைகளை விரைவாக்குகிறது. அதாவது உங்கள் காத்திருப்பு நேரம் குறைக்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான health insurance singapore திட்டத்தின் கட்டணம் சராசரி வயது, வாழ்க்கை முறை காரணிகள் மற்றும் மருத்துவ வரலாற்றைப் பொறுத்து மாறுபடும். 45 வயதான புகைப்பிடிக்காதவருக்கு, சிங்கப்பூரில் இன்சூரன்ஸ் சராசரி விலை $132 சிங்கப்பூர் டாலர்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts