TamilSaaga

இந்தப் பணம் எனக்கானது அல்ல! S$10,000-ஐ சிறுவர்களுக்கு வழங்கிய விளையாட்டு வீரர்!

சிங்கப்பூரைச் சார்ந்த 40 வயது விளையாட்டு வீரர், அங்கு உள்ள Muhammadiyah Welfare Home-க்கு S$10,000-ஐ நன்கொடையாக வழங்கியுள்ளார். 

சிங்கப்பூரின் LION Food boll குழுவைச் சார்ந்தவர் Hassan Sunny. கடந்த ஜூன் 11-ம் நாள் நடந்த 2026-ம் ஆண்டிற்கான உலக கால்பந்து போட்டியின் ஆசிய தகுதிச் சுற்றில் தாய்லாந்து அணியை வீழ்த்தி சிங்கப்பூர் அணி வென்றது. அதற்க்கு முக்கிய காரணம் Goalkeeper Hassan Sunny தான். 

இது ஒரு புறம் இருக்க Hassan Sunny பெற்றுத் தந்த இந்த வெற்றி சீன அணிக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. தங்கள் நாடு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்கு இடையூறாக இருந்த தாய்லாந்து அணியை வீழ்த்தியதால், சீன மக்களுக்கு ஹாசன் ஹீரோவாக மாறிவிட்டார். 

அதனால் தங்கள் நன்றியைத் தெரிவிக்க நினைத்த சீன மக்கள் தங்களால் இயன்ற தொகையை Haasan-க்கு அனுப்பியுள்ளனர். அவருக்கு சொந்தமான உணவகத்தின் வங்கிக் கணக்கிற்கு ஆயிரக்கணக்கான டாலர் பணம் வந்து குவிந்துள்ளது. உணவகத்தின் Payment QR Code மூலம் சீன மக்கள் பணத்தை அனுப்பியுள்ளனர். 

இந்த பணத்தை தான் Haasan நன்கொடையாக வழங்கியுள்ளார். இஸ்லாம் மத நம்பிக்கைப் படி “இந்தப் பணம் எனது உழைப்பால் உருவாகவில்லை எனவே அதனை இல்லாதோருக்கு தானம் செய்ய வேண்டும். மேலும் நானும் கடைநிலையிலிருந்து முன்னேறியவன் தான் எனவே இந்தக் குழந்தைகளின் வாழ்க்கை வலியை என்னால் உணர முடியும். எனக்கும் நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் முகத்தில் சிரிப்பை பார்க்க நினைத்தேன். அதற்காக தான் இந்த நண்கொடையை வழங்கினேன்.” என தெரிவித்தார். 

Muhammadiyah Welfare Home என்பது கடினமான வாழ்க்கைச் சூழலைக் கொண்ட சிறுவர்களுக்கான தொண்டு அமைப்பு ஆகும். இங்கு 10 வயது முதல் 19 வயது வரையிலான சிறுவர்கள் உள்ளனர்.

நன்கொடை அளித்ததுடன் அந்த சிறுவர்களிடமும் உரையாடி அவர்களின் வாழ்க்கையைக் குறித்து அறிந்துகொண்டார். சீன மக்களின் அன்பால் மிகவும் பிரபலமான Hassan பல இடங்களுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். சீனாவின் கால்பந்து உலககோப்பைக் கனவை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவிய Hassan-க்கு அந்நாட்டு மக்கள் மிகுந்த நன்றி பாராட்டி வருகின்றனர். 

நன்றியுணர்வுடன் பணத்தை அனுப்பிக் கொண்டிருக்கும் சீன மக்களை பணம் அனுப்ப வேண்டாம் எனவும் Hassan சமூக வலைத்தளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரின் இந்த சிறப்பான செயல் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல், இவரின் ரசிகர் பட்டாளத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. இப்போ சிங்கப்பூர் மட்டும்மல்ல சீனாவிலும் Hassan-க்கான ரசிகர்கள் பெருகியுள்ளனர்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

 

Related posts