சிங்கப்பூரில் உள்ள இஸ்லாமிய சமூகத்தினர் இந்த மாதம் 20ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடுவார்கள் என்று தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நாட்காட்டியில் குறிப்பிடப்படும் ஸுல் ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாம் நாள் அன்று பொதுவாக ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. சிங்கப்பூரில் டாக்டர் முஃப்தி டாக்டர் நஸிருடின் முகமது நசிர் அவர்களின் வானியல் கணிப்பின் அடிப்படையில் தற்போது உறுதி செய்துள்ளார்.
மேலும் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சமூகத்தினர் அதன் பின்னணியில் இருக்கின்ற தியாகத்தின் அர்த்தத்தை உணர்ந்து மேலும் தற்போது நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அதனை கொண்டாடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.