சிங்கப்பூரில் உள்ளூர் வணிகங்கள் நிலைத்தன்மையின் துறையில் திறன்களை வளர்க்கவும், பசுமை பொருளாதாரத்தில் வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் உதவும் புதிய திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 1) தொடங்கப்பட்டுள்ளது. என்டர்பிரைஸ் சிங்கப்பூர் நிறுவனம் இதற்காக 180 மில்லியன் வரை ஒதுக்கி, நிறுவன நிலைத்தன்மை திட்டத்திற்காக அளிக்கும். இது முதலில் 2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் குறைந்தது 6,000 நிறுவனங்கள் இந்த புதிய முயற்சியால் பயனடைய உள்ளன. இன்று வெள்ளிக்கிழமை துவக்க அறிவிப்பை வெளியிட்ட வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங், காலநிலை மாற்றம் குறித்த கவலைகள் அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் கார்பன் தடம் குறைப்பு மற்றும் அதிக நிலையான நடைமுறைகளை நிறுவுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க தூண்டியுள்ளன என்றார்.
சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030 என சிங்கப்பூர் அறிவித்துள்ளது, இது சிங்கப்பூர் ஒரு பசுமையான மற்றும் மக்கள் நல்ல முறையில் வாழக்கூடிய வீடாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு தேசிய திட்டமாகும். மேலும் நிறுவனங்கள் இப்போது தங்கள் வணிக உத்தி மற்றும் நடைமுறைகளில் நிலைத்தன்மையை இணைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர் என்று திரு கான் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் மரச்சாமான்கள் தொழில் கவுன்சில் மற்றும் சிங்கப்பூர் ஒப்பந்தக்காரர்கள் சங்கம் போன்ற வர்த்தக சங்கங்கள் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் கைகோர்க்கும் என்று திரு கான் கூறினார்.