TamilSaaga
Lorry Cranes

சிங்கப்பூரில் பணியிட பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அறிவித்த மானியம்! முழு விவரம்!

சிங்கப்பூரில் பணியிட பாதுகாப்பை மேன்படுத்தவும், இறப்புகள் அறவே நடக்காமல் தடுப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை சிங்கப்பூர் மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக லாரியில் உள்ள கிரேன்களின் நிலைப்படுத்தி அமைப்புகளை நிறுவுவதற்கு மானியம் வழங்கி வருகின்றது மனிதவள அமைச்சகம்.

இந்த நிலையில் நேற்று மனிதவள அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி அந்த மானியம் கூடுதலாக $1.8 மில்லியன் நிதியைப் பெற்றுள்ளது. மேலும் இது இரண்டு ஆண்டுகளுக்கு, அதாவது மார்ச் 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஜூலை 11 அன்று BCA அகாடமியில் சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்க லிமிடெட் நடத்திய வருடாந்திர சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சார நிகழ்வில் மனிதவளத் துறை இணையமைச்சர் தினேஷ் வாசு தாஷ் இந்த புதிய நிதி மற்றும் நீட்டிப்பை பற்றி அறிவித்தார்.

கடந்த மார்ச் 2023ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த $4 மில்லியன் மானியம், முன்னதாக நிறுவல் கட்டணத்தில் 70 சதவீதத்தை நிதியாக அளித்தது. மேலும் கடந்த மார்ச் 2025 வரை இதற்கான காலக்கெடு இருந்தது. ஒரு நிறுவனம் தங்கள் கிரேனில் இந்த அமைப்பை நிறுவ சுமார் $10,000 செலவாகும், மேலும் ஒவ்வொரு நிறுவனமும் இதற்காக $20,000 வரை நிதி பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பச்சிளம் மகள்.. கொடூரமாக கொன்ற தந்தை – சிங்கை அரசு கொடுத்த தண்டனை என்ன?

லாரி கிரேன்கள் என்பவை கனமான சுமைகளைத் தூக்குவதற்கும், கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படும் லாரியில் பொருத்தப்பட்ட கிரேன்கள் ஆகும். அவற்றின் ஒவ்வொரு சக்கரத்திலும் நிலைப்படுத்தும் கால்கள் அல்லது “அவுட்ரிகர்கள்” பொருத்தப்பட்டிருக்கும், அவை பாரத்தை ஏற்றும்போது அல்லது இறக்கும்போதும் கவிழ்ந்து விடாமல் தடுக்கின்றன.

Related posts