27 வயதான மலேசிய ஆடவர் ஒருவர், தன்னிடம் உள்ள சேமிப்பின் அளவு மிகவும் குறைவாக இருப்பதன் காரணமாக அவருடன் இருப்பதை “மிகவும் பாதுகாப்பற்றதாக” உணர்ந்த அவரது காதலியால் சமீபத்தில் கைவிடப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 9ம் தேதி வெளியான பேஸ்புக் பதிவின் ஸ்கிரீன்ஷாட்களின்படி, 27 வயது இளைஞன் தனது சேமிப்பில் RM50,000, அதாவது சிங்கப்பூர் டாலர் மதிப்பில் 16,000 மட்டுமே வைத்திருந்ததாக காதலி புகார் செய்துள்ளார்.
“உங்களுக்கு ஏற்கனவே 27 வயது ஆகிவிட்டது, ஆனால் 50 ஆயிரம் மட்டுமே சேமித்துள்ளீர்கள், ஆகவே முடியாது” என்று வாட்ஸ்அப் செய்தியில் தெரிவித்துள்ளார் அந்த பெண். மேலும், காதலனின் மாத வருமானம் RM4,000 முதல் RM5,000 வரை மட்டுமே இருந்ததால் அதுகுறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளார். எனவே இந்த விவகாரம் குறித்து அந்த காதலி சிறிது நேரம் யோசித்து வருவதாக அந்த வாட்ஸ்அப் உரையாடலில் தெரியவந்துள்ளது.
மேலும் அந்த பெண் முன்னதாகவே பிரிந்து செல்ல விரும்பியுள்ளார் என்றும், சீனப் புத்தாண்டு அன்று அந்த பெண்ணின் உறவு நிலையைப் பற்றி அவரது உறவினர்கள் அவரிடம் கேட்பார்கள் என்பது குறித்து தான் கவலையுடன் இருப்பதாகவும் அப்பெண் கூறியுள்ளார். சரி எவ்வளவு சேமிப்பு உனக்கு போதுமானது என்று கேட்டதற்கு, அந்தப் பெண் தனக்குத் தெரியாது என்று பதிலளித்துள்ளார், ஆனால் ஒரு மாதத்திற்கு RM50,000 செலவாகலாம் என்று கூறியுள்ளார்.
இந்த முகநூல் பதிவு 3,600-க்கும் மேற்பட்ட கருத்துகளை பெற்றுள்ளது மற்றும் பிப்ரவரி 9 அன்று வெளியிடப்பட்டதிலிருந்து 13,000 முறை பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. கூறப்பட்ட கருத்துக்களில் அதிகமான கருத்துக்கள் அந்த பெண்ணை தவிர்த்து வேறு நல்ல பெண்ணை சந்திக்குமாறு கூறியுள்ளனர். பெண்கள் பல சாதனைகள் படைக்கும் இந்த காலத்தில் பணம் ஒரு பெரிய விஷயமா என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.