சிங்கப்பூரின் முதல் நிலத்தடி நீர் தேக்கத்தை உருவாக்கி இருக்கிறது சிங்கப்பூர் அரசு. இந்த நிலத்தடி நீர் தேக்கத்தின் நோக்கம் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதே. ஆம், சிங்கப்பூரில் இருக்கும் Bidadari எனும் பகுதியில் இருக்கும் Bidadari பூங்காவிற்கு கீழே இந்த நிலத்தடி நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தடி நீர் தேக்கத்தை பற்றி முழுமையாக பார்க்கலாம். மேலும் இந்த நீர் தேக்கத்தால் என்னென்ன பயன்கள் மற்றும் இது எவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறது என்பதை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
சிங்கப்பூரின் Sustainability and Environment Minister இந்த நிலத்தடி நீர்த்தேக்கத்தை பற்றி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், சிங்கப்பூரில் ஏற்கனவே பல நீர்த்தேக்கங்கள் இருந்தபோதிலும் இதுவே சிங்கப்பூரில் முதல் நிலத்தடி நீர் தேக்கமாக கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி இந்த நிலத்தடி நீர்த்தேக்கம் வேலை செய்ய தொடங்கி இருக்கிறது. இந்த Bidadari நீர்த்தேக்கம் அந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 8800 குடும்பங்களுக்கு தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்யும். வீடுகள் மட்டும் அல்லாமல் மற்ற அனைத்து வேலைகளுக்கும் இந்த நீர் தேக்கத்தில் இருக்கும் நீரை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் இந்த நிலத்தடி நீர்த்தேக்கம் முழு வீச்சில் பயன்படுத்தப்படும்.
இந்த நிலத்தடி நீர்த் தேக்கம் சுமார் 700 sqm பரப்பளவில் Bidadari பூங்காவிற்கு கீழே கட்டப்பட்டிருக்கிறது. இங்கே மிகப்பெரிய இரண்டு அறைகள் உள்ளது ஒவ்வொரு அறைக்கும் எளிதாக படிக்கட்டின் வழியாக செல்ல முடியும். இதன் மூலம் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை சரி செய்யவும் எளிதாக இருக்கும். இங்கே கட்டப்பட்டிருக்கும் இரண்டு அறைகளுக்கும் சுமார் 6.5 m , பக்கத்தில் பைப்புகள் பொருத்தப்பட்டு அந்த பகுதியில் இருக்கும் அனைவருக்கும் தண்ணீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு தண்ணீர் சேமிப்பு அறைகளும் ஒலிம்பிக்கில் இருக்கும் நீச்சல் குளங்களை போல மூன்று குளங்களின் கொள்ளளவை கொண்டதாகும். இது போன்ற நீர்த்தேக்கங்கள் தரைத் தளத்திற்கு மேலே கட்டப்படும் பொழுது அதிகமான நிலங்களை ஆக்கிரமிக்கும் ஆனால் இது தரை தளத்திற்கு கீழேகட்டப்பட்டுள்ளதால், இது போன்ற கொள்ளளவைக் கொண்ட நீர்த் தேக்கங்களை விட இது மூன்றில் ஒரு பங்கு இடத்தையே ஆக்கிரமித்து இருக்கிறது. மேலும் நிலத்தட்டுப்பாடு காரணமாக, இதுபோன்ற நிலத்தடி நீர்த்தேக்கத்தை உருவாக்கியிருக்கிறது சிங்கப்பூர் அரசாங்கம்.
இதுபோன்ற நிலத்தடி நீர் தேக்கங்களை கட்டும்போது அதற்கு உண்டான பைப்புகளை குறுகிய இடத்தில் பொருத்துவது மிகவும் சவாலான காரியமாக இருந்தது, எனினும் அதை வெற்றிகரமாக செய்து முடித்து இருக்கிறது PUB. இந்த Bidadari நிலத்தடி நீர்த்தேக்கம் ஐந்து பெரிய பம்புகள் வழியாக அந்த பகுதியில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீரை விநியோகிக்கும். ஏற்கனவே தண்ணீர் பிரச்சனையில் இருக்கும் Bidadari பகுதி இனி இந்த நிலத்தடி நீர் தேக்கத்தின் மூலம் அந்த பிரச்சனையிலிருந்து விடுபடும். இந்த நீர் தேக்கத்திலிருந்து ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணியில் இருந்து 10 மணி வரை மற்றும் மாலை 6 மணியிலிருந்து பத்து மணி வரை தண்ணீர் ஹை பிரஷரின் மூலம் விநியோகிக்கப்படும். ஏனென்றால், இந்த காலம் peak hours ஆக கருதப்படுகிறது. தரை தளத்திற்கு மேல் உள்ள நீர் தேக்கமாக இருப்பின் புவியீர்ப்பு விசையோடு தண்ணீரை செலுத்த முடியும் ஆனால் இங்கு அது சாத்தியமிராது. அதற்காக மிகவும் சக்தி வாய்ந்த ஐந்து சென்றலைஸ்டு பம்புகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படும்.
காலை 6 மணியிலிருந்து பத்து மணி மற்றும் மாலை 6 மணியிலிருந்து பத்து மணி ஆகிய நேரங்கள் அதிகமான நீர் பயன்பாட்டு நேரமாக கருதப்படுகிறது. எனவே இந்த நேரத்தில் அனைவருக்கும் தேவையான நீரை சமமாக அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த நிலத்தடி நீர் தேக்கம் முழுமையாக ஆட்டோமேட்டிக் என்பதால் இதனைக் கண்காணிக்க கண்ட்ரோல் ரூம் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் இங்கே ஏற்படும் பிரச்சனைகளையும் எளிதாக சரி செய்ய முடியும். 3d மாடலிங் மூலம் இது கட்டப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருக்கும் 2d மாடலிங்கை விட இது புதிய வசதிகளையும் சிறப்பான பைப் வேலைபாடுகளையும் கொண்டிருக்கிறது.
கொரோனா தொற்று காலகட்டங்களில் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறை மற்றும் கட்டுமான பொருட்களின் பற்றாக்குறையால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிந்திருக்க வேண்டிய இந்த நிலத்தடி நீர்த் தேக்கம் தற்போது ஜூன் மாதம் முடிந்திருக்கிறது. கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை தரைத் தளத்திலிருந்து கீழே ஒன்பது மீட்டர் அளவிற்கு எடுத்துச் செல்வதற்கு தனியாக ஸ்பைரல் Ramp பொருத்தப்பட்டு அதன் மூலம் எடுத்து செல்லப்பட்டது. மழை மற்றும் இயற்கை சூழ்நிலை காரணங்களால் உள்ளே தேங்கிய தண்ணீர் வடிவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் இந்த நீர்த் தேக்கத்தின் கட்டுமானம் சிறிது காலதாமதம் ஆனது. HBD, NPark மற்றும் PUB யின் தெளிவான திட்டம் மற்றும் அனைவரின் ஒருங்கிணைந்த வேலைகளால் இந்த நிலத்தடி நீர் தேக்கத்தின் கட்டுமானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.