தடுப்பூசி போட்டுக் கொள்வது ஒன்றே இந்த பெருந்தொற்றில் இருந்து முழுமையாக விடுபட ஒரே வாய்ப்பு என்று அறிஞர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டு கொள்வோருக்கு மேலும் பல சலுகைகளை பல நிறுவனங்கள் வழங்க முன்வந்துள்ளன.
மேலும் இந்த சலுகைகளை ஒருங்கிணைக்க சிறப்பாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. Minmed Group என்ற சுகாதார பராமரிப்பு நிறுவனம் தற்போது iamvaccinated.sg என்ற இணையதளத்தை பிரத்தியேகமாக உருவாக்கியுள்ளது.
இந்த இணையத்தில் The Face Shop மற்றும் Hard Rock Cafe Singapore உள்ளிட்ட சுமார் 28 நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஹெல்த் அப் செயலியில் உள்ள சான்றிதழை காட்டினால் சலுகைகளை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை இந்த சலுகைகள் வழங்கப்படும். நாட்டில் தடுப்பூசி போட்டுகொள்வோரின் விகிதத்தை உயர்த்த இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.