சிங்கப்பூர் தெலோங் பிளாசா கட்டிடத்தில் கிரசண்டில் தாழ்வார பகுதி ஒன்றில் நேற்று மாலை தீ பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த கட்டிடத்தின் ஒன்பதாபது மாடியில் உள்ள தாழ்வாரத்தில் விபத்து ஏற்பட்டு அங்குள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியதாக குடிமை தற்காப்பு படை தெரிவித்துள்ளது.
விபத்து செய்தியை கேட்டறிந்த குடிமை தற்காப்பு படை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீர் ஜெட் மூலம் தீயை அணைத்து அதனை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் சிங்கப்பூரை சேர்ந்த 8 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 4 பேர் மட்டும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகிறது.